24 கோடி ரூபா பெறுமதியான கொக்கைனுடன் போலந்து பிரஜை கைது

By Digital Desk 5

17 Aug, 2022 | 10:30 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சுமார் 24 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன்  போலந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலைய  சுங்கப் பிரிவினர் அவரைக் கைது செய்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் ( சட்டம் ) சுதத்த சில்வா தெரிவித்தார்.

கொலம்பியாவிலிருந்து கட்டார் நோக்கி பயணித்து, பின்னர் கட்டாரின் தோஹா நகரிலிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போலந்து பிரஜை எடுத்து வந்த பயணப் பொதியை  கண்டுபிடிக்க முடியாது, முதலில் விமான நிலையத்திலிருந்து வெளியேறி, பின்னர் மீள பயணப் பொதியினை எடுத்து செல்வதற்காக வந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவினர் கூறினர்.  

பயணப் பொதி தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

இதன்போது,  பயன்படுத்தப்பட்ட தொலை நகல் இயந்திரம் ஒன்றுக்குள்,  கடதாசி சுருள்களுக்குள்  சுமார் 5 கிலோ கிராம் நிறைக் கொண்ட  கொக்கைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இந் நிலையிலேயே போலந்து பிரஜையை கைது செய்துள்ள சுங்கப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக அவரி பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57