குழந்தைகளின் இதயம்

By Devika

17 Aug, 2022 | 10:29 AM
image

தற்போது பச்சிளம் குழந்தைகூட இதய நோயுடன் பிறப்பதுண்டு. இதயத்தைப் பாதுகாக்கும் முறைகளில் குழந்தை நலம் மிக முக்கியமானது. 

பிறப்பதற்கு முன்பே சிசுவின் இதயத்தைக் காத்தல் அவசியம். பொதுவாகத் திருமணமானவுடன் கருக்­கொள்வது இயல்பிலேயே நிகழக்கூடியது. அந்த நாட்களில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்­டும். பெண் கருக்கொண்டதை அறிவதற்கு முன்பே கரு­வில் உள்ள குழந்தையின் இதயம் முழுமையாக உருவாகி­விடும். 

பொதுவாகப் பெண்கள் முகக் க்ரீம்கள் பயன்படுத்து­வதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இவை கரு­வில் உள்ள சிசுவின் இதயத்தைப் பாதிக்கின்றன. கருத்த­ரிக்கும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

குழந்தைகளின் இதயம் பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தாய்க்குப் பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தால் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். தாய்க்குக் கர்ப்பக் காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால்,  அது கருவிலேயே சிசுவைப் பாதிக்கும். 

தந்தைக்குப் பிறவி இதய நோய் இருந்தால் குழந்தைக்­கும் இதயம் பாதிக்கப்படலாம். கருவில் குழந்தை உருவாகும் முறை குறித்து அறிந்தால் இப்பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்துகொள்ளலாம். 

ஒரு தாய் தாய்மையை உணர்வதற்கு முன்னர் கர்ப்பப்பையில் கரு ஓர் இடத்தைப் பிடித்துவிடும். சிசுவின் உடல் பாகங்களில் முதலில் உருவாவது இதயமே. இந்த இதயம் எட்டு வாரத்திற்குள் முழுமையாக உருவாகிவிடும். இரண்டு குழாயாக மட்டும் உருவாகும் இதயமானது இணைந்து மடங்கி, இதயத்தின் வடிவைப் பெற்றுவிடும். இந்த எட்டு வாரங்களில் கரு உருவானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். பொதுவாக இந்த நேரத்தில் தாய்க்குக் காய்ச்சல் வந்தால், மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படும். இது சாதாரணமான காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. இதனால் தாய்க்கு ஏற்படும் அபாயம் மட்டுமில்லாமல் கருவிலுள்ள சிசுவையும் அது தாக்கிவிடும். இதனால் குழந்தைக்குக் காது கேளாமல் போய்விடலாம். மேலும் கண்ணில் காடராக்ட் வளர்ச்சி ஏற்படும். இந்தப் பாதிப்பை ‘ருபெல்லா சிண்ட்ரோம்’ என்று மருத்­துவ உலகம் கூறுகிறது. 

இவ்வகை சளி, காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்துகள் மிக வீரிய­முள்ளவையாக இருப்பதால், இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படும். இந்தப் பக்கவிளைவுகள் கருவிலுள்ள சிசுவின் இதயத்தைத் தாக்கக்கூடும். கரு தோன்றக்கூடிய முதல் எட்டு வாரங்கள் பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். 

தனக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் காத்துக்கொள்ள வேண்டும். அப்போது மாத்திரை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால், கருவிலுள்ள சிசுவுக்கு இதய ஓட்டை ஏற்பட்டுவிடாமல் காக்கலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடல் எரிச்சல் பாதிப்பை ஃபுட்மாப் (FODMAP)...

2023-02-06 13:47:17
news-image

அயோட்டிக் டிஸெக்ஷன் எனப்படும் இதய தமனி...

2023-02-04 13:31:54
news-image

மூளை கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2023-02-02 16:56:07
news-image

பிரபலமடைந்து வரும் யெயர்த்திங் தெரபி

2023-02-01 17:35:35
news-image

குழந்தைகளுக்கு குறட்டை வருவது ஏன்?

2023-02-01 11:51:33
news-image

இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின்...

2023-02-01 11:09:27
news-image

ஸ்கின் கிராப்டிங் எனப்படும் தோல் பொறுத்தும்...

2023-01-31 16:23:50
news-image

குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு

2023-01-30 12:35:06
news-image

ஸ்லீப் பரலைஸ் எனும் உறக்க பக்கவாதப்...

2023-01-30 11:30:54
news-image

இதயத்துடிப்பு சீராக இயங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன...

2023-01-28 13:21:14
news-image

அதிகாலை நடைப்பயிற்சி நல்லதல்ல!

2023-01-27 18:27:50
news-image

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா?

2023-01-27 16:59:02