இலங்கையிலிருந்து ஆடைகளை கொள்வனவு செய்யும் சர்வதேச ஆடை வர்த்தக நாம பிரதிநிதிகளின் நடவடிக்கை இலங்கைக்கும் வழங்குநர்களுக்கும் இடையில் பல வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையான உறவை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
அத்தோடு இவை இலங்கை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமையை வரவேற்பதாக கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் ,
மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் ஆடைத் துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக நெறிமுறை நிறுவன அணுகுமுறை மற்றும் அமெரிக்க ஆடை மற்றும் பாதணிகள் சங்கத்தின் ஒத்துழைப்புக்களுக்கு கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
நெறிமுறை நிறுவன அணுகுமுறையானது ஆனது இலங்கையிலுள்ள பொருளாதார நிபுணர்கள், தொழில் சங்கங்கள், பணியாளர் பிரதிநிதிகள் மற்றும் அங்கத்துவ நிறுவனங்களுடன் இணைந்து தொழிலாளர்கள், வழங்குநர்கள் மற்றும் தொழில்துறையினர் மீதான பொருளாதார அழுத்தங்களைப் புரிந்துகொண்டு அவர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படும்.
முதற்கட்ட நடவடிக்கையாக உலர் உணவுகள், மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதற்கும் சட்டத்திற்கு இணங்குவதற்கும் விநியோகத்தர்களுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்க ஆடை மற்றும் பாதணிகள் சங்கம் உறுதிபூண்டுள்ளது.
ஊழியர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வதற்கு தொழில்துறை முன்னுரிமை அளிக்கிறது. இது போன்ற நெருக்கடியான காலங்களில், தொழில்துறையால் ஏற்கனவே எடுக்கப்பட்ட பணியாளர் நலன்புரி நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும். மேலும் இந்த கூட்டு நடவடிக்கையை கூட்டு ஆடைகள் சங்க மன்றம் பாராட்டியுள்ளது. சில தொழிற்சாலைகள் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன.
ஏனைய தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களுக்கு வீட்டிற்கு கொண்டு செல்ல மேலதிக உணவை வழங்குகின்றன. இதனால் அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் உணவளிக்க உதவுகிறார்கள். சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கு இலவச பாடசாலை புத்தகங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன.
ஆடைத்தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். கடந்த ஜூன் மாதத்திற்குள் சுமார் 80 சதவீத ஆடை உற்பத்தியாளர்கள் ஆண்டு ஊதிய உயர்வுக்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அதிகரித்துள்ளனர்.
இது 25 சதவீத அதிகரிப்பு மற்றும் இந்த அதிகரிப்புகள் 2021 இல் இருந்து நடைமுறைக்கு வருகிறது என கூட்டு ஆடைகள் சங்க மன்ற பொதுச்செயலாளர் யொஹான் லோரன்ஸ் கூறினார்.
இலங்கையில் இருந்து ஆடைகளை கொள்வனவு செய்யும் சர்வதேச ஆடை வர்த்தக நாம பிரதிநிதிகளின் இந்த நடவடிக்கை இலங்கைக்கும் வழங்குநர்களுக்கும் இடையில் பல வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையான உறவை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
ஊழியர்களின் நலனை உறுதி செய்யும் அதேவேளையில் இது போன்ற சவாலான காலங்களில் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தியைத் தொடர நிறுவனங்களின் வலிமை பாராட்டுக்குரியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM