ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் செந்தில் தொண்டமான் வலியுறுத்தல்

By Digital Desk 5

16 Aug, 2022 | 07:10 PM
image

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் தோட்டப்புற மாணவர்கள் உள்வாங்கப்படும் சதவீதம் குறைந்துள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் விளக்கப்படுத்தியுள்ளதுடன், தோட்டப்புற மாணவர்களை அதிகமாக உள்வாங்கும் பொறிமுறையொன்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் முயற்சியால் 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளை மாத்திரமே சேர்க்க முடியுமென்ற நிலைமை காணப்பட்டது.

ஆனால் தற்போது தோட்டங்களில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துவிட்டது.

மேலும் தோட்டத்தில் அவுட்குரோவர் முறைமை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகள் அறவிடப்படுவதில்லை இதனால் தோட்டப்புறங்களில் உள்ள பிள்ளைகள் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் எண்ணிக்கை குறைவடைந்துவிட்டது.

இக்கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்கும் பொறிமுறையை காலத்துக்கு ஏற்றால்போல் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இக்கல்லூரிக்கான அனுமதியை பெற தாய் அல்லது தந்தையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகள் மாத்திரம் உள்வாங்கப்பட்டுள்ளது.

அதை மாற்றி அமைத்து தமது  மூதாதையினர் தோட்டங்களில் பணிபுரிந்திருந்தால் அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டாயம் அனுமதியை வழங்க வேண்டும்.

அதே போன்று தோட்டப் பாடசாலைகளில் மாணவர் ஒருவர் கல்வி கற்றிருப்பதற்கான அத்தாட்சியை உறுதிப்படுத்தினால் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கல்வி அமைச்சிடம் முன்வைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50