கோட்டாபய ராஜபக்ஷவிற்கான சிறப்புரிமைகளை வழங்கும் பொறுப்பு எமக்குள்ளது - பந்துல

By T. Saranya

16 Aug, 2022 | 09:25 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் சிறப்புரிமைகளை வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி தேர்தல் சட்டங்களுக்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கும், நிகழ்கால ஜனாதிபதிக்கும் காணப்படும் சிறப்புரிமைகள் தொடர்பில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்திய பிரத்தியேக விமானத்திற்கு இலங்கை அரசாங்கமே பணம் செலுத்தியுள்ளது.

அவ்வாறெனில் முன்னாள் ஜனாதிபதி தற்போதும் சிறப்புரிமைகளுடனா வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்று நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டங்களுக்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கும், நிகழ்கால ஜனாதிபதிக்கும் காணப்படும் சிறப்புரிமைகள் தொடர்பில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 

முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்ததன் பின்னர் அவரது பாரியாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரரேமதாசவின் பாரியாரான ஹேமா பிரேமதாசவிற்கு அந்த உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது என்று எண்ணுகின்றேன். எதிர்காலத்தில் இது தொடர்பில் விரிவாக அவதானிக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34