வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் செட்டிகுளத்தில் போராட்டம்

By Digital Desk 5

16 Aug, 2022 | 04:46 PM
image

கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் செட்டிகுளம் பகுதியில் போராட்டம் ஒன்று இன்று (16) முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த அவர்கள்,

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். அது இன்றுவரை தொடர்கிறது.

இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது. இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன.

அந்தவகையில் வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு அதிகாரப்பரவலாக்கம், என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாக இருப்பதுடன்,சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.

ஆகவே எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும் நட்புநாடான இந்தியாவிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொண்டு வடகிழக்கு வாழ் மக்களான நாம் எமது சாத்வீகமான ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவை ஆரம்பித்திருக்கின்றோம். என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாம் நாட்டை துண்டாடவில்லை கௌரவமான தீர்வையே கேட்கிறோம், கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், பயங்கரவாத தடை சட்டத்தை உடன் நீக்கு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48