சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு சாத்தியப்பட அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் - தயாசிறி

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 08:33 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து , அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு அனைத்து கட்சிகளும் இணைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். மாறாக அரசாங்கம் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்குமெனில் மீண்டும் எதிர்ப்புக்களுக்கு உள்ளாக நேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பு 15, ஸ்ரீ நந்தாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் செவ்வாய்க்கிழமை (16) கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வகட்சி அரசாங்கம் குறித்த எமது யோசனைகளை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீக்கப்பட்ட அமைச்சரவை மீண்டும் நியமிக்கப்படுமாயின் நாட்டு மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே தற்போதைய ஜனாதிபதி மக்கள் நம்பிக்கை கொள்ளும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.

புதிய அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பது தொடர்பில் இதுவரையில் நாம் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. எமது தீர்மானங்களை நாம் கட்சி தலைவரிடம் முன்வைத்திருக்கின்றோம். நாம் முன்வைத்துள்ள முறைமைக்கு அமைய சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அதில் பங்கேற்க தயாராக உள்ளோம். அதற்கு முன்னர் தேசிய சபை ஸ்தாபிக்கப்பட வேண்டியது முக்கியத்துவமுடையதாகும்.

கட்சி தலைவர்களை உள்ளடக்கிய குறித்த தேசிய சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைய ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் எமது அதிகபட்சி ஒத்துழைப்புக்களை வழங்குவோம். அத்தோடு புதிய அமைச்சரவையை ஸ்தாபிக்கும் போது , முக்கியமான நபர்களை அதற்காக பரிந்துரைப்பதற்கு சகல கட்சிகளும் முன்வர வேண்டும்.

அனைவருக்கும் பதவிகளை வழங்குகின்ற 30 - 40 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை நாம் எதிர்க்கின்றோம். எனவே மிகச் சிறிய அமைச்சரவையை நியமித்து , முக்கியமான நபர்களை அதில் உள்வாங்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை எனில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாரிய தவறுகள் ஏற்படக் கூடும்.

நாட்டு மக்களுக்கு பாரிய அமைச்சரவை தேவையற்றது. அவர்களின் தேவை சிறிய அமைச்சரவை ஊடாக நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகும். சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து , அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான வெளிநாட்டு கொள்கைகளைப் பின்பற்றி , அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். தற்போதைய நெருக்கடிகளிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் , எடுக்கும் தீர்மானங்கள் தவறானவையாகவே அமையும். அரசாங்கம் தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்குமெனில் மீண்டும் மக்களின் எதிர்ப்புக்களுக்கு உள்ளாகக் கூடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04