தடைநீக்கத்திற்கு கனடிய தமிழர் பேரவை வரவேற்பு -உறுதியான தொடர் நடவடிக்கைகளிற்கு அழைப்பு

By Rajeeban

16 Aug, 2022 | 04:06 PM
image

புலம்பெயர் அமைப்புகள் சில தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை வரவேற்கிறது. ஆயினும் உறுதியான தொடர் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

கனடிய தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

இலங்கையில் இன உறவுகள் மற்றும் பொருளாதார விளைவுகள் மேம்படும் வகையில் புதிய இலங்கை அரசாங்கத்தால் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதைக் கனடிய தமிழர் பேரவை (CTC) வரவேற்கிறது. எவ்வாறாயினும், ஓகஸ்ற் 1, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்கள், தனிநபர்கள் இன்னும் தடைப் பட்டியலில் இருப்பது ஏமாற்றத்தையளிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவித்தல், வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துத் தனியார் காணிகளையும் விடுவித்தல், வடக்கு கிழக்கை இராணுவமயமாக்கலில் இருந்து விடுவித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி்ல் 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்திற்கு முழுமையாக இணங்குமாறும், தற்போதைய தீர்மானத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்துகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50