பல கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்

By Digital Desk 5

16 Aug, 2022 | 04:09 PM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும்,மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் ,இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும்,3 மாதத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டும்,சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அனைத்தும்  தடைசெய்ய வேண்டும்,ஒயிலின் விலை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு நகரில் மாபெரும் கவனயீர்ப்பு  போராட்டம்ஒன்றினை  இன்று (16) முன்னெடுத்தனர் .

முல்லைத்தீவு மீனவ சம்மேளனத்தினால்  இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு நகரப்பகுதியில் உள்ள புனித இராயப்பர் ஆலயத்துக்கு அருகில் ஆரம்பமான  மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு நகரின் ஊடாக  மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது .

சுமார் பத்து மீன்பிடி படகுகளை உழவு இயந்திங்களில் ஏற்றி வேண்டும் வேண்டும் மண்ணெண்ணெய் வேண்டும்,தடை செய் தடை செய் சட்டவிரோத தொழிலை தடை செய்,நிறுத்து நிறுத்து இந்திய இழுவைப்படகின் அத்துமீறலை நிறுத்து உள்ளிட்ட  கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஆயிரம் மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பேரணியாக சென்ற மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம் )  மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ். குணபாலன் (காணி) மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர் .

ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர்  மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பதைக்காக கையளிக்கப்பட்ட குறித்த மகஜர்களை தங்களது குறிப்புக்களையும் உள்ளடக்கி உரிய தரப்பினர்களுக்கு  அனுப்பி வைப்பதாக முல்லைத்தீவு மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம் ) மீனவர்களுக்கு தெரிவித்தார் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47