கோட்டாவை வெளியேற்றினாலும் பழைய முகங்கள் மீண்டும் ஆட்சியில் வெளிப்படுகின்றன - நளின் பண்டார

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 04:11 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் பிரச்சினைகள் தீர்ப்பது ஒரு புறமிருக்க அமைச்சரவை  மற்றும் இராஜாங்க அமைச்சர்கள்  70  பேர் அடங்கிய புதியதொரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் கோட்டாபய வெளியேறினாலும் பழைய முகங்கள் அனைத்தும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் வெளிப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டது. தற்போது வரிசையில் காத்திருக்கும் மக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.  நாட்டில் பிரச்சினைகள் முடிந்து விட்டது என்று மக்களுக்கு மாயவிம்பத்தை காட்டுவதற்கு முயற்சிக்கிறது

இருப்பினும், நாட்டில் பிரச்சினைகள் முடியவில்லை. நாட்டு மக்கள் மேலும் பாரியதொரு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

பணவீக்கம் உக்கிரமடைந்துள்ளது. தற்போது அதன் அதிகரிப்பு 90 வீதமாக பதிவாகியிருக்கிறது. இதனால் வறிய, நடுத்தர மற்றும் அரச தொழில் புரியும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டு இருக்கும் மக்களுக்கு போசாக்கான உணவினை கூட  பெற்றுக் கொள்வதற்கு முடியாது உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மக்களின் அன்றாட வருமானம் வரும் வழிகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையான பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

கடந்த காலங்களில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் தொழில்களை நிறுத்திவிட்டு அதில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்.  இரசாயன உரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானம் இதற்கு முதல் காரணமாகும்.

இந்நிலையில் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒருபுறமிருக்க 70 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாரியளவில் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

அதில் தற்போது நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் , பவித்ரா வன்னியராச்சி மற்றும் ரோஹித அபேகுணவர்தன போன்றோருக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோராப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வெளியேறினாலும் பழைய முகங்கள் அனைத்தும் ஆட்சி அதிகாரங்களில் மீண்டும் வெளிப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11