ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பு - அரசாங்கம்

By Digital Desk 5

16 Aug, 2022 | 04:12 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள் , விலை சூத்திரத்திற்கமைய வலுசக்தி அமைச்சினால் திருத்தியமைக்கப்படும். ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தூதுரக மட்டத்தில் சாதமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்பில் விலை சூத்திரமொன்று பேணப்பட்டு வருகிறது. குறித்த விலை சூத்திரத்திற்கமைய உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கமைய இலங்கையிலும் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும்.

இதே வேளை ரஷ்ய அரசாங்கத்திடம் குறைச்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் , அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தூதரக மட்டத்தில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரஷ்ய அரசாங்கம் எரிபொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுவதில்லை. அரசாங்கத்தினால் எரிபொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதில்லை. எனவே இது தொடர்பில் ரஷ்யாவின் தனியார் துறையினருடனேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தினால் இதற்கான நடவடிக்கைகள் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் கொள்கை...

2022-11-28 16:51:42
news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34