புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதல்ல : அரசாங்கம்

Published By: Digital Desk 3

17 Aug, 2022 | 10:06 AM
image

(எம்.மனோசித்ரா)

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் முதலீட்டை இலக்காகக் கொண்டதாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பாதுகாப்பு அமைச்சின் தொடர்ச்சியான கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே குறித்த அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலீட்டை இலக்காகக் கொண்டே குறித்த அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவதாக பல தரப்பினராலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்க்கப்பட்ட போதே  அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முதலீட்டை இலக்காகக் கொண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

1968 (48) ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஐக்கிய நாடுகள் சட்ட விதிகளுக்கமைய , பாதுகாப்பு அமைச்சினால் சர்வதேச தரநிலைக்கமைய பயங்கரவாத மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்பற்ற அமைப்புக்கள் வேறு பிரிக்கப்பட்டு, அவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடல் மற்றும் நீக்குதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அதற்கமையவே கடந்த காலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்த 6 தமிழ் அமைப்புக்களுக்கான தடையை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் 1373 ஆம் தீர்மானத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் அவுஸ்திரேலிய தமிழ் காங்ரஸ், உலக தமிழ் பேரவை, உலக தமிழ் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனேடிய தமிழ் காங்ரஸ், பிரித்தானிய தமிழ் பேரவை என்பவை மீதான தடை இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமையவே தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரங்களுக்கமைய, ஐ.நா. தீர்மானங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னர் இவ்வாறு தடைகளை நீக்குவதற்காள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சில அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 3 புதிய அமைப்புக்கள் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தாரூர் அதர் அல்லது ஜம்யுல் அதர் மொஸ்க் அல்லது தாரூல் அதர் குர்ஆர் மத்ரஸா அல்லது தாரூல் அதர் , இலங்கை இஸ்லாமிய மாணவர்கள் சங்கம் அல்லது ஜமீயா மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய 6 அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள அதே வேளை, 3 அமைப்புக்களுக்கு புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55