(இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை. அத்துடன் இலங்கைக்குள் தொண்டு நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி வழங்கி ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை சீனா ஒருபோதும் முன்னெடுக்கவில்லை.
இலங்கை மக்களின் மக்களாணைக்கு மதிப்பளித்து சீனா இலங்கையுடன் இணக்கமாக செயற்படுகிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்த சீனாவின் யுவான் வான் -05 கப்பலை வரவேற்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடல் மற்றும் வான்பரப்பு இலங்கையினை சர்வதேசத்துடன் ஒன்றிணைக்கிறது.நாட்டின் சுயாதீனத்தன்மையினை பாதுகாத்து சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பது எமது பிரதான வலியுறுத்தலாக காணப்படுகிறது.
இந்து பசுபிக் வலயம் அமைதி வலயமாக காணப்பட வேண்டும்.பலம் வாய்ந்த தரப்பினரது அதிகார போட்டியிகால் இந்து பசுபிக் வலயம் முரண்பாடான வலயமாக மாற்றம் பெற கூடாது.யுவான் வான் 05 கப்பல் குறித்து பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டன.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.இலங்கையின் உள்ளக விவகாரங்கள் சீனா ஒருபோதும் தலையிடவில்லை.
நெருக்கடியான சூழ்நிலையில் நட்பு நாடு என்ற ரீதியில் சீனா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் கட்டடைப்பை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் சீனா இலங்கைக்குள் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி முறையற்ற வகையில் ஒருபோதும் செயற்படவில்லை.நாட்டு மக்களின் மக்களாணைக்கு மதிப்பளித்து சீனா செயற்படுகிறது.
சீனா இலங்கைக்கு கடனால் ஒத்துழைப்பு வழங்குவதை காட்டிலும் முதலீட்டினால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம்.இலங்கை சீர் குலைந்தால் இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும்.அத்துடன் நிர்வாக கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படும்.
பொருளாதார ரீதியில் பலமாகவோ அல்லது பலவீனமாக இருந்தாலும் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சீன கப்பல் விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக செயற்பட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM