பாடசாலைகள் றக்பி போட்டி : 2 ஆவது இடத்தை உறுதிசெய்தது புனித சூசையப்பர் கல்லூரி

By Digital Desk 5

16 Aug, 2022 | 03:23 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கம் நடத்திய டயலொக் பாடசாலைகள் றக்பி முதலாம் பிரிவில் புனித சூசையப்பர் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

வெஸ்லி கல்லூரிக்கு எதிராக ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் திங்கட்கிழமை (15) பிற்பகல் நடைபெற்ற  சுப்பர் சுற்று  றக்பி  போட்டியில் 26 (4 ட்ரைகள், 3 கோன்வேர்ஷன்கள்) - 11 (ஒரு ட்ரை, 2 பெனல்டிகள்) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற புனித சூசையப்பர் கல்லூரி 2 போனஸ் புள்ளிகளை ஈட்டி உப சம்பயின் பட்டத்தை வென்றெடுத்தது.

இந்த சுப்பர் சுற்று போட்டியில் 4 ட்ரைகளை வைத்து 2 போனஸ் புள்ளிகளை ஈட்டினால் மாத்திரமே உப சம்பியன் கிண்ணத்தை வென்றெடுக்க முடியும் என அறிந்திருந்த புனித சூசையப்பர் கல்லூரி, போட்டியின் இரண்டாவது பகுதியில் 3 ட்ரைகளை வைத்து வெற்றியீட்டி உப சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்தப் போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்லி, இடைவேளையின்போது 11 - 7 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

வெஸ்லி வீரர் ஜயவர்தன பெனல்டி ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.

எனினும் சற்று நேரத்தில் பதிலடி கொடுத்த புனித சூசையப்பர், 20ஆவது நிமிடத்தில் ஜெஹான் அத்துகோரளவின் ட்ரை மூலம் முன்னிலை அடைந்தது. அந்த ட்ரைக்கான மேலதிகப் புள்ளிகளை டில்ஹார சுபாஷ் பெற்றுக்கொடுத்தார்.

எவ்வாறாயினும் ஜயவர்தன 2ஆவது பெனல்டி புள்ளிகளையும் அக்கீஷ் ஜயமான்ன ட்ரை புள்ளிகளையும் பெற்றுக்கொடுக்க இடைவேளையின் போது வெஸ்லி கல்லூரி 11 - 7 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையில் பின்னர் ஆக்ரோஷத்துடன் விளையாடிய புனித சூசையப்பர், சீரான இடைவெளியில் 3 ட்ரைகளை வைத்து வெஸ்லியை தோல்வி அடையச் செய்தது.

சமோத் செனவிரட்ன, நவீன் மாரசிங்க, சன்ச்சின்த வைத்யநாத் ஆகியோர் ட்ரைகளை வைத்ததுடன் அவற்றில் 2 ட்ரைகளுக்கான மேலதிகப் புள்ளிகளை டில்ஹார சுபாஷ் பெற்றுக்கொடுத்தார்.

இந்தப் போட்டி முடிவுடன் புனித சூசையப்பர் 30 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 2ஆம் இடத்தைப் பெற்றது. றோயல் கல்லூரி 29 புள்ளிகளுன் 3ஆம் இடத்தைப் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22
news-image

சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரகாசிக்கும் இராணுவ...

2022-09-21 15:30:11
news-image

இலங்கை சைக்கிளோட்ட வீர, வீராங்கனைகள் மூவருக்கு...

2022-09-21 11:26:43
news-image

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

2022-09-21 10:00:43
news-image

இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

2022-09-21 09:59:20