(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டு இரண்டரை வருட காலத்திற்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த வரைபு சட்டமூலத்தின் திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.
பாராளுமன்றத்தின் பதவி காலம் நான்கரை வருடத்தை நிறைவு செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.
இரண்டரை வருட காலத்திற்கு பிறகு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் திருத்தத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும உட்பட அவரது தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இரண்டரை வருட காலத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் திருத்த யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றதாக நீதி,சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான சட்டமூல வரைபினை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் பாராளுமன்றிற்கு சமர்ப்பித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM