நாட்டின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் - அரசாங்கம்

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 03:16 PM
image

(எம்.மனோசித்ரா)

தமிழ் மற்றும் சிங்களம் என்பன அரச மொழிகளாகும். எனவே அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் இவ்விரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பில் எந்த பிரச்சினைகளும் தோற்றம் பெறவில்லை.

இதற்கு முன்னரும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டும் அரச மொழிகளாகும் என்றார்.

இதே வேளை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜயந்த,  பந்துல குணவர்த்தன, அலி சப்ரி , விதுர விக்கிரமநாயக்க, கஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27