மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பலசரக்குக் கடையொன்றிற்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக கடையின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 

காத்தான்குடி 01, ரெடெலிகொம் வீதியிலுள்ள எம்.ஏ.ஜி.முஹம்மது பிர்தௌஸ் என்பவரது கடையிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக, பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையின் கூரையைப் பிரித்து உட்புகுந்தே, இத்திருட்டு இடம் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இத்திருட்டு குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்தும் புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

-அப்துல் கையூம்