இதுபோன்றதொரு கப்பல் ஏற்கனவே இலங்கை வந்துள்ளது - பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இந்தியாவிடமே கேட்கவேண்டும் - சீன தூதுவர்

By Rajeeban

16 Aug, 2022 | 12:20 PM
image

யுவான் வாங் 5 கப்பல் போன்றதொரு கப்பல் ஏற்கனவே 2014 இல் இலங்கைக்கு வந்துள்ளது என தெரிவித்துள்ள சீன தூதுவர்  இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் குறித்த கேள்விகளிற்கான பதில்களை இந்தியாவிடம் தான் கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்

யுவான்வாங் 5 கப்பலின் வருகை நிகழ்வின் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளிற்கு பதிலளித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

கேள்வி?கப்பல்  தாமதமானதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன?

பதில்- எல்லோருக்கும் தெரியும் நான் பணிவுடன் இருக்கவேண்டிய அவசியமில்லை.

கேள்வி- இந்தியா பாதுகாப்பு கரிசனைகளை வெளியிட்டுள்ளதே?

பதில்- நீங்கள் இந்த கேள்விகளை இந்திய நண்பர்களிடம் கேட்கவேண்டும் எனநான் கருதுகின்றேன்.

இந்த விஞ்ஞான ஆராய்ச்சி கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வெற்றிகரமாகவும் அமைதியாகவும் வந்தடைந்துள்ளது.

இது எங்கள் இரு நாடுகளிற்கு இடையில் வழமையான பரிமாற்றங்கள் என நான் கருதுகின்றேன்.

சீனாவும் இலங்கையும் நீண்ட கால நட்புறவை கொண்டுள்ளன.

சீனா ஆராய்ச்சி கப்பல் அம்பாந்தோட்டை விஜயம் மிகவும் இயல்பானது சாதாரணமானது.

இதில் விசேடமாக எதுவுமில்லை எல்லோருக்கும் இது தெரியும்.

இவ்வாறான கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இது முதல் தடவையல்ல,2014 இல் இவ்வாறானதொரு சீன கப்பல் கொழும்பிற்கு  விஜயம் மேற்கொண்டது.

ஆகவே இது இயல்பான விடயம்,ஆகவே எங்களது ஊடக நண்பர்கள் இந்த நோக்கத்தின் விஜயம் குறித்து இலங்கை மக்களிற்கும் முழு உலகிற்கும் தெரிவிக்கவேண்டும்.

இந்த கப்பலின் விஜயம் குறித்து கடந்த சில இராஜதந்திர சிக்கல்கள் காணப்பட்டன,கப்பலிற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

பதில் - எனக்கு தெரியாது இதுவே வாழ்க்கையாகயிருக்கலாம் இதுவே இயல்பான விடயம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

சுயாதீனமாக செயற்படும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு...

2022-09-30 09:37:02
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50