கோப் மற்றும் கோபா குழுக்களின் செயற்பாடுகள் என்ன ?

By Digital Desk 5

16 Aug, 2022 | 12:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் பல சிறப்புக்குழுக்கள் காணப்பட்டாலும் கோப் மற்றும் கோபா ஆகிய இரு பிரதான குழுக்கள் பற்றி தொடர்ந்து பரவலாக பேசப்படுகிறது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு(கோப்),அரசாங்க கணக்குகள் பற்றிய குழு(கோபா) ஆகிய குழுக்களுக்கு தலைவர்கள் எதிர்கட்சியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிந்தாலும் 9ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர்பில் அதற்கான தலைமைத்துவ நியமனங்கள் ஆளும் தரப்பினருக்கே வழங்கப்பட்டிருந்தது.

9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 3ஆம் திகதி சிம்மாசன பிரசங்கத்தின் ஊடாக சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து கோப்,கோபா உட்பட முக்கிய குழுக்களின் நியமனங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள்,கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஏனைய தரப்பினரின் ஊழல் மோசடி தொடர்பில் கோப் மற்றும் கோபா பாரதூரமான அறிக்கையினை சமர்ப்பித்திருந்தாலும்,அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கும் அதிகாரம் குழுக்களுக்கு வழங்கப்படவில்லை.

இருப்பினும் பல மோசடிகள் தொடர்பில் இந்த குழுக்களின் அறிக்கையிடல் உறுதிப்படுத்தப்பட்ட சிறந்த ஆவணமாக காணப்படுகிறது.

கோப் மற்றும் கோப ஆகியவற்றின் தலைவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் சபாநாயகரிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த குழுக்களின் தலைமைத்துவ பதவியை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான எரான் விக்ரமரட்ன,கபீர் ஹசீம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு –கோப்

பாராளுமன்ற தெரிவு குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் 16 உறுப்பினர்களை கொண்டதாக கோப் குழு காணப்படும்.

பகிரங்க கூட்டுத்தாபனங்கள்,அரச நிறுவனங்கள்,மற்றும் ஏதேனும் எழுத்திலான சட்டத்தினால் அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட ஏதேனும் தொழிலின் அல்லது வேறு பொறுப்பு முயற்சியின் கணக்குகளை கணக்காய்வாரள நாயகத்தின் உதவியுடன் பரசீலனை செய்வது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) கடமையாகும்.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஏதேனும் பகிரங்க கூட்டுத்தானம்,அரசாங்கத்தினால் அங்கிகாரமளிக்கப்பட்ட தொழிலின் கணக்குகள், வரவு செலவு திட்டங்கள்,வருடாந்த மதிப்பீடுகள்,நிதிகள்,நிதிசார் நடவடிக்கை முறைகள்,செயல் நிறைவேற்றம் மற்றும் பொதுவான  முகாமைத்துவம் என்பன பற்றியும் அதிலிருந்து எழும் விடயங்கள் தொடர்பில் காலத்திற்கு காலம் பாராளுமன்றிற்கு அறிக்கையிடல் வேண்டும்.

கோப் குழுவின் அறிக்கை சபைக்கு சமர்ப்பித்ததும்,நிதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும்,உரிய நிறுவனம் அல்லது திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கும தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவதானிப்புக்கள் மற்றும் முன்னெடுத்த நடவடிக்கைகளை எட்டுவார காலத்திற்குள் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர் அல்லாத பாராளுமன்றத்தின் வேறு உறுப்பினர்கள் குழுவின் நடவடிக்கைகளில் குழுவின் தலைவரின் அனுமதியுடன் பங்குப்பற்றலாம்.அத்துடன் குழு அல்லது அதன் உப குழுக்களில் எவையும் அதன் கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமொருவரை அதன் முன்னர் அழைத்து விசாரிப்பதற்கும், ஆவணங்களை கோருவதற்கும் சொத்துக்களை பார்வையிடுவதற்கும் அதிகாரமுடையாயிருத்தல் வேண்டும்.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின்  கூட்ட நடப்பெண் நான்கு உறுப்பினர்களாதல் வேண்டும்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு-கோபா

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) 16 உறுப்பினர்களை கொண்டதாக காணப்படும்.அரசாங்கச் செலவுகளை எதிர்க்கொள்வதற்காகப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்றன கணக்குகளையும்,பாராளுமன்றத்தினால் முன் இடப்படும் கணக்குகளை கணக்காளர் நாயகத்தின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் கடமையாகும்.

திணைக்களம்,உள்ளுராட்சி அதிகார சபைகளினால் பரிசோதனை செய்யப்பட்ட கணக்குகள்,நிதிகள்,நிதிசார் நடைமுறைகள்,செயல் நிறைவேற்றம்,மற்றும் பொதுவான முகாமைத்துவம் மற்றும் அவற்றிலிருந்து எழும் கருமம் தொடர்பில்  அரசாங்க கணக்குகள் பற்றிய குழு காலத்திற்கு காலம் பாராளுமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர் அல்லாத பாராளுமன்றத்தின் வேறு உறுப்பினர்கள் குழுவின் நடவடிக்கைகளில் குழுவின் தலைவரின் அனுமதியுடன் பங்குப்பற்றலாம்.அத்துடன் குழு அல்லது அதன் உப குழுக்களில் எவையும் அதன் கடமைகளைப் புரிவதற்காக எவரேனுமொருவரை அதன் முன்னர் அழைத்து விசாரிப்பதற்கும், ஆவணங்களை கோருவதற்கும் சொத்துக்களை பார்வையிடுவதற்கும் அதிகாரமுடையாயிருத்தல் வேண்டும்.அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின்  கூட்ட நடப்பெண் நான்கு உறுப்பினர்களாதல் வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின்...

2022-09-29 11:55:39
news-image

அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை...

2022-09-27 11:20:56
news-image

கலைக்கூடமாகும் ஜனாதிபதி மாளிகை

2022-09-22 13:34:39
news-image

ஜனாதிபதி ஆட்சிமுறையை நியாயப்படுத்தும் ஜே.ஆரின் பேரப்பிள்ளை

2022-09-22 10:39:18
news-image

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித...

2022-09-20 13:39:22
news-image

முட்டாள் தனமான யோசனைகளை தவிருங்கள் !...

2022-09-19 11:00:38
news-image

ஜெனீவாவில் இந்திய நிலைப்பாடு

2022-09-14 16:23:39
news-image

தேசிய, சர்வதேச கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை

2022-09-13 15:12:48
news-image

மக்கள் ஆணையைக்கொண்ட அரசின் தேவை குறித்து...

2022-09-07 13:21:06
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பொருளாதார...

2022-09-06 19:09:58
news-image

அவமானங்கள், துன்பங்களால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்ட...

2022-09-07 15:08:17
news-image

அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் திண்டாடும் இலங்கை...

2022-09-05 15:16:12