திப்பிலியின் மருத்துவ குணங்கள்

Published By: Digital Desk 7

16 Aug, 2022 | 12:53 PM
image

மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும், பல்வேறு சுவாச பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவுகிறது.

பல்வலி மற்றும் வாய்வழி பிரச்சினைகளை அடித்து விரட்டும் வலி நிவாரணியாக திப்பிலி உள்ளது. இதன் பக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் டிக்ளோஃபெனாக் என்ற அழற்சி எதிர்ப்பு மருந்தோடு ஒப்பிடும்போது பல வாய்வழி பிரச்சினைகளுக்கு உதவுகிறது.

திப்பிலி செடியின் பழங்களிலிருந்து பெறப்பட்ட அத்தியாவசிய எண்ணெய் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

திப்பிலியில் உள்ள வலி நிவாரண பண்பு, நமது உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கவும் தூக்கத்தைத் தூண்டவும் உதவுகிறது.

திப்பிலியின் வேரிலிருந்து கிடைக்கும் சாறு, ஆண்டிஹைபர் க்ளைசெமிக் மற்றும் ஆண்டிஹைபர் லிபிடெமிக் பண்பைக் கொண்டுள்ளது. இது அதன் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்கு காரணமாகிறது. நீரிழிவு காரணமாக ஏற்படும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

திப்பிலியின் தண்டுகளிலிருந்து பெறப்படும் எத்தனால் சாறு ஆன்டிபிரைடிக், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை பக்டீரியா போன்ற பல அந்நிய பொருட்களால் தூண்டப்படும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

திப்பிலியில் பைபர் உள்ளதால் அவை கொழுப்பைக் குறைக்கும் திறனை கொண்டுள்ளது. இவற்றில் உள்ள இந்த முக்கிய கலவை பசியை அடக்காமல் எடை இழக்கவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

மலச்சிக்கல், வாய்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல செரிமான சிக்கல்களைத் தடுக்கும் ப்ரீபயாடிக் ஆற்றலை திப்பிலி கொண்டுள்ளது. இதன் நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக வயிற்றுப் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

மாதவிடாய் பிடிப்புகள், மேகவெட்டை நோய், கருவுறாமை மற்றும் பாலுணர்ச்சி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு அதிசய மூலிகையாக திப்பிலி உள்ளது. இனப்பெருக்க அமைப்புக்கு இதன் டொனிக் பரிந்துரைக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37
news-image

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா எனும் கல்லீரல் புற்றுநோய்...

2024-09-12 16:42:06
news-image

தசை வலியை கண்டறியும் பரிசோதனை -...

2024-09-11 17:22:29
news-image

ஒரு பக்க காது கேளாமைக்கான நவீன...

2024-09-10 15:44:35
news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20