பாகிஸ்தானில் பஸ் - பவுசர் மோதி விபத்து ; 20 பேர் பலி

By T. Saranya

16 Aug, 2022 | 12:54 PM
image

Photo: @DeputyMultan/ Twitter

பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் பஸ் ஒன்றும் பவுசர் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை முல்தான் அதிவேக வீதியில்  எரிபொருள் பவுசருடன் லாகூரிலிருந்து கராச்சிக்குச் சென்ற பஸ் மோதியதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்துள்ளது.

குறித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 06 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மற்றும் சடலங்கள் முல்தானில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

பஸ் சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில முதல்வர் சௌத்ரி பெர்வைஸ் இலாஹி இந்த வீதி விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறிக்கையை வரவழைத்து, பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குமாறு முல்தான் நகர ஆணையாளருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52
news-image

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் பயங்கரம் :...

2022-10-02 10:05:52
news-image

மறைந்த பிரித்தானிய மகாராணியின் இறுதி ஊர்வலத்தில்...

2022-10-01 15:17:12
news-image

உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஸ்யாவுடன்...

2022-10-01 12:51:36