கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 12:02 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வெலிவேரிய பொலிஸாரால் வெலிவேரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்   வெலிவேரிய  பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவர்  இதன்போது  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேகநபர்கள் பல்வேறு பிரதேசங்களில்  முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள்  , துவிச்சக்கர வண்டிகள் உட்பட சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் ஜா-எல, பியகம, கடவத்த, களனி, யக்கல, மஹாபாகே, கோட்டை, பெலியகொட, மீகவத்த, ராகம மற்றும் வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்  2 முச்சக்கரவண்டிகள், 10 மோட்டார் சைக்கிள்கள், 11 துவிச்சக்கரவண்டிகள் மற்றும் நீர்பம்பி உட்பட பல்வேறு பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 25, 28,30 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெலிவேரிய, கம்பஹா மற்றும் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 13 ஆம் திகதி கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதோடு அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறிலங்கன் விமானம் தாமதமாகியதற்கு முகாமைத்துவம் மற்றும் ...

2024-02-26 20:21:38
news-image

பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை...

2024-02-26 19:42:03
news-image

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்...

2024-02-26 19:27:22
news-image

மட்டு நகர் பகுதில் புகையிரத்துடன் மோதி...

2024-02-26 18:55:36
news-image

அதிகவெப்ப நிலை தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு...

2024-02-26 18:21:31
news-image

பொதுச் சுகாதார பரிசோதகர் ரொஷான் புஷ்பகுமார ...

2024-02-26 17:55:39
news-image

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை அனுப்ப விடுக்கப்பட்ட...

2024-02-26 17:47:41
news-image

அரசியலமைப்பையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சபாநாயகர் மலினப்படுத்துகிறார்...

2024-02-26 17:32:15
news-image

அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில்...

2024-02-26 17:21:22
news-image

பிரதமரை சந்தித்தார் ருமேனிய தூதுவர்

2024-02-26 17:03:49
news-image

அம்பாறையில் பாடசாலை பஸ் ஆற்றில் வீழ்ந்தது...

2024-02-26 17:20:05
news-image

மேய்ச்சல் தரையை மீட்கும் பண்ணையாளர்களின் போராட்டம்...

2024-02-26 16:41:29