'மாயக்குதிரை' சிறுகதை தொகுப்பு - சிறு பார்வை

By Nanthini

16 Aug, 2022 | 11:22 AM
image

"அன்றாட உபயோகத்தில் இல்லாத பொருட்களை வைப்பதற்கென உயரத்தில் கட்டப்பட்டிருந்த தட்டுக்களில், அலுமாரிகளில், எழுதும் மேசையில், கணினி மேசையில், முகம் பார்க்கும் கண்ணாடி முன், கட்டிலில், நாற்காலியில், அதனருகில் தரையில் இவையெல்லாம் போதாதென்று கட்டிலுக்குக் கீழும் புத்தகங்கள் கிடந்தன. கழிப்பறையின் தண்ணீர்க்குழாயினுள் சிறிய புத்தகங்கள் செருகப்பட்டிருந்தன......"

திருகோணமலையைச் சேர்ந்த தமிழ்நதியினால் எழுதப்பட்டு 2018ஆம் ஆண்டு வெளிவந்த நூலே 'மாயக்குதிரை' என்னும் சிறுகதை தொகுப்பு. 168 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 10 சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளும் வெவ்வேறுபட்ட கருப்பொருட்களை வெவ்வேறு விதங்களில் சித்திரிக்கின்றன.

மேலே மேற்கோள் காட்டப்பட்டிருப்பது 'நித்திலாவின் புத்தகங்கள்' என்னும் தலைப்பில் அமைந்த சிறுகதை. இது சில இடங்களில் என்னை பிரதிபலிப்பதாகவே இருந்தது. புத்தகங்கள் மீது ஒரு பெண் கொண்ட பற்றினை தெள்ளத்தெளிவாக இச்சிறுகதை புலப்படுத்துகின்றது. இச்சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தினால் சில நிமிடங்கள் பக்கங்களை மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இச்சிறுகதைகள் போன்றே இப்புத்தகத்தில் உள்ள மற்றைய கதைகளும் வாசகர் மனம் நெகிழும்படியாக படைக்கப்பட்டுள்ளன. ஈழம், புலம்பெயர் தேசம் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு அவ்விடங்களில் எதிர்நோக்கிய, எதிர்நோக்கும் பிரச்சினைகளை பற்றி பேசுகின்றன, இச்சிறுகதைகள்.

புலம்பெயர் தேசத்தில் சூதாட்டத்துக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் அதையே செய்தல், ஈழப்போரின்போது இராணுவத்தினால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் குமுறல், பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்த்தல், போரின்போது தொலைந்துபோன மகனை தேடியலையும் தாயின் மனப்போராட்டம், புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் கடனை வாங்கி குவித்த பின்னர் அதனை கட்ட முடியாமல் தவித்தல் போன்ற பல பிரச்சினைகளை படம்பிடித்துக் காட்டுகின்றது, தமிழ்நதியின் 'மாயக்குதிரை'.

இப்புத்தகத்தில் உள்ள சிறுகதைகளை ஒரே மூச்சாக முதல் தினமே வாசித்து முடித்திருந்தேன். 

ஒரு சிறு குறைதான். மாயக்குதிரை என்பதற்கு பதில் 'நித்திலாவின் புத்தகங்கள்' என பெயரிட்டிருக்கலாம்.

"அவளுக்கு புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டது எந்த வயதிலிருந்து என்று அவளுக்கு உறுதியாக தெரியவில்லை. மதில்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்களை, அஞ்சலிக் கவிதைகளை, அரசியல் அறைகூவல்களை எதையும் அவள் விட்டுவைத்ததில்லை. மளிகைப் பொருட்களை சுற்றிவரும் காகிதங்களை சுருக்கம் நீக்கி எடுத்து வாசிப்பதற்கென சேகரித்து வைப்பாள்...."

"தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கொடுத்த பணத்தில் புத்தகம் வாங்கிக்கொண்டு வந்திறங்கியவளை பார்த்தபோதுதான் அவளில் ஏதோ கோளாறு இருப்பதாக அம்மாவுக்குத் தோன்ற ஆரம்பித்தது....."

"ஒரு பெரிய உலகமே தன் அலுமாரிக்குள் அடைக்கப்பட்டிருப்பதாக அவள் நம்பத் தொடங்கினாள்....."

"கையில் ஒரு சதம் கூட இல்லாதபோதிலும் புத்தகக் கடைகளுக்குப் போவாள். புத்தகங்களின் முதுகைப் பார்த்துக்கொண்டு நிற்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது....."

சிறந்த கதைப்பாங்கு. சிறந்த புத்தகம். நீங்களும் வாங்கி வாசியுங்கள். 

- அஷ்வினி வையந்தி (கிழக்கு பல்கலைக்கழகம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

2022-11-24 09:50:38
news-image

அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

2022-11-23 15:47:20
news-image

'நிலைமாற்றத்திற்கான பயணம்' மேடை நாடக விழா

2022-11-23 14:25:16
news-image

‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை...

2022-11-22 15:04:03
news-image

திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

2022-11-16 14:40:44
news-image

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

2022-11-15 15:05:04
news-image

நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர்...

2022-11-14 12:25:05
news-image

நிசாந்தம் கவிதை நூல் ஒரு கண்ணோட்டம்

2022-11-12 11:22:08
news-image

பாரம்பரியத்தை போற்றும் 'கோவார்' சுவரோவியக் கலை

2022-11-10 21:37:20
news-image

கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை...

2022-11-05 19:51:13
news-image

உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி...

2022-10-27 16:51:30
news-image

காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

2022-10-26 16:27:05