பண்டிகை அல்லது வீட்டு விசேஷம் என்றால், பெண்கள் புத்தாடை வாங்குகின்றனரோ இல்லையோ, புருவங்களை அழகுபடுத்த கிளம்பிவிடுகின்றனர். நெற் பயிரில் களை பிடுங்குவதை போல, புருவ முடியை பிடுங்கிச் செய்யப்படும் புருவ சீரமைப்புகளால் பெண்களுக்கு அழகு கிட்டினாலும், காலப்போக்கில், அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
புருவ முடிகள் வளரும் இடம், பிராணன் இயங்கும் இடங்கள்.
இறப்பு நெருங்கும்போது, புருவ முடிகளைத் தொட்டாலே, கையோடு வந்துவிடும். அந்தளவுக்கு உயிருக்கும் புருவ முடிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. புருவ முடிகளை அழகாக்குகிறோம் என்ற பேரில், அடிக்கடி பிடுங்குதல், உயிர்நிலையோடு சம்பந்தப்பட்ட வர்ம இடங்களை பலவீனப்படுத்தும். காலப்போக்கில், அந்த பலவீன நிலை, பெண்களுக்கு குணமாக்க முடியாத வியாதிகளை பரிசளிக்கும்.
வர்மங்கள் பாதிக்கப்படுவதால், பெண்களின் பிராண சக்தி குறைகிறது. விளைவு, குறைவான பிராண சக்தியால் ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளை பெற்று, ஆரோக்கிய குறைவான சமுதாயத்துக்கே வித்திட்டுவிடுகின்றனர். வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை, எந்த வழியிலும் சிதைக்கக் கூடாது. மேலும், உடலின் முக்கிய சக்திப் பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன. எனவே, இந்த இடங்களில் கை வைப்பது, நமக்கு நாமே கொள்ளி வைத்துக்கொள்வது போலாகும். நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றாற் போல், சுத்தமான விளக்கெண்ணெயை, கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்ணில் இட்டு வருவதனாலும், ஆயுளையும் புருவங்களின் அழகையும் நீண்ட நாள் பேண முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM