வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க ! : சிறுவர்களுக்காக நாம் உள்ளோம் அமைப்பு

By Digital Desk 5

16 Aug, 2022 | 10:00 AM
image

சிறுவர்கள் மீதான வன்முறை தொடர்பான தற்போதைய அறிக்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ள தனிநபர்கள் குழுவொன்று, சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரை அனைத்து வகையான வன்முறைகளில் இருந்தும் விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் மூலம் பாதுகாக்கவும், உடல் மற்றும் உளவியல் ஆதரவை வழங்கவும், சட்டரீதியான பாதுகாப்பை வழங்கவும் சிறுவர்களுக்காக நாம் உள்ளோம் (We Are For Children - WAFC) அமைப்பை அண்மையில் ஆரம்பித்துள்ளனர். 

இலாப நோக்கற்ற ஒரு அமைப்பான WAFC, சட்டவிரோத வேலைவாய்ப்பு உட்பட சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு எதிரான வன்முறை தொடர்பில் சகிப்புத்தன்மையற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மேலும், நீண்டகால நிதியியல் மற்றும் சமூக சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான திறனை வளர்ப்பதற்கும் WAFC உதவுகிறது. 

WAFC இன் தலைவரான குஷான் அத்தபத்து அவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகையில், “எங்கள் அமைப்பும் உறுப்பினர்களும் சமூக மற்றும் தார்மீகக் கடமையாக வன்முறைக்கு எதிராக சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரைப் பாதுகாப்பதில் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

எந்தவொரு தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ தங்கள் ஆற்றலுக்கு ஏற்றவாறு காலத்தின் தேவையாக உள்ள இந்த முயற்சியுடன் கைகோர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டார். 

WAFC இன் ஸ்தாபகரான இந்துனில் உக்வத்த அவர்கள் கூறுகையில், “சிறுவர்கள் பிறப்பிலேயே கொண்டுள்ள தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் டிஜிட்டல் வசதி கொண்ட கல்வி ஸ்தாபனத்துடன், பாதுகாப்பான இல்லமொன்றை நிறுவுவதே எனது இறுதி இலக்கு. 

இறுதியாக, அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவதன் மூலம் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய திறன்களைக் கொண்ட ஒரு தலைமுறையை இந்த நாட்டிற்கு வழங்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார். 

We Are For Children அமைப்பானது உத்தரவாதம் கொண்ட வரையறுக்கப்பட்ட நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சிறுவர் மற்றும் இளம் வயதினரைப் பாதுகாப்பதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாவலர், ஆசிரியர்கள், அனைத்து உள்நாட்டு அரசாங்க நிறுவனங்கள், தொடர்புடைய அரச அமைச்சுக்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட விரும்புகிறோம். 

கொள்கை சீர்திருத்தம், சிறுவர் மற்றும் இளம் வயதினரின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், மருத்துவ மற்றும் உளவியல் பராமரிப்பு மற்றும் தொடர்புடைய சட்ட சேவைகளுக்கான ஏற்பாடுகளுக்கு அனுசரணையளித்தல் போன்ற பணிகளை ஊக்குவிக்கும் வகையில் WAFC செயல்படும். 

ஹர்ஷினி பெரேரா, இந்துனில் உக்வத்த, குஷான் அத்தபத்து, பிரபோதினி முனசிங்க, சாரங்க திசசேகர, ஷொஹான் குலசூரிய மற்றும் ஸ்டெஃபானி சிறிவர்தன ஆகியோர் ஸ்தாபக உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய கௌரவ பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக உள்ளனர். 

மருத்துவ, உளவியல், சட்ட சேவைகள் மற்றும் தேவையின் அடிப்படையில் நிலைபேற்றியல் கொண்ட வேலை வாய்ப்புகளில் தொழில்முறை ஆதரவு சேவைகளை WAFC வரவேற்கிறது. 

WAFC துரித அழைப்பு சேவை மையமானது பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் இளம் வயதினருக்காக +94 777 11 4646 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக குரல்/வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளும் வகையில் பிரத்தியேகமான சேவைகளை வழங்கும். மேலும் தகவல் விபரங்களுக்கு http://www.wafc.lk/ ஐப் பார்வையிடவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் “கப்ருக” லொத்தரின்...

2022-09-26 15:47:17
news-image

”Smart Home’’ஐ அறிமுகம் செய்து உங்கள்...

2022-09-15 22:41:37
news-image

மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி...

2022-09-02 13:00:40
news-image

இலங்கையில் ஆயிரம் குடும்பங்களுக்கு உணவளிக்க கைகோர்த்த...

2022-09-02 10:08:36
news-image

குணநலம் மிக்க வாழ்க்கையின் புதிய பயணத்திற்காக...

2022-09-01 13:57:33
news-image

தொலைக்காட்சி பாவனையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும்...

2022-08-23 21:56:55
news-image

தேசிய Fuel Pass தளத்தை நடைமுறைப்படுத்த...

2022-08-24 16:19:12
news-image

செலான் வங்கி ஹேலீஸ் சோலருடன் கைகோர்த்து...

2022-08-22 20:53:25
news-image

2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான...

2022-08-16 12:13:13
news-image

வன்முறைக்கு எதிராக சிறுவர்களைப் பாதுகாக்க !...

2022-08-16 10:00:25
news-image

ISO தரச் சான்றிதழைப் பெற்றது பிரியந்த...

2022-08-08 13:16:57
news-image

LOLC நடைமுறைப்படுத்தும் 500 மில்லியன் ரூபாய்...

2022-07-26 14:54:18