மருந்து தட்டுப்பாடு தொடர்ந்தால் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: T. Saranya

16 Aug, 2022 | 09:03 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் 200 க்கும் அதிக மருந்துகளுக்கு  கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு தொடர்ந்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் நாடு மோசமான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி  காரணமாக பல வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

அரசாங்கத்தினால் இவ்வருடத்தில் மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகளை  கொள்வனவு செய்வதற்காக  12.4 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஒரு காலாண்டுக்கு மாத்திரம் 20 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த அளவிலும்  ஏனைய மருந்துகள் போதியளவிலும் கையிருப்பில் உள்ளன.

கடந்த மே மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 200 க்கும் அதிகமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் 56 சதவீதமான சத்திரசிகிச்சை மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. அது மாத்திரமின்றி சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான இயந்திர வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலவுகிறது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55
news-image

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட...

2023-03-21 16:50:04