எஸ்.எல்.சி. அழைப்பு இருபது - 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி : எஸ்.எல்.சி. ரெட்ஸ் அணி சம்பியன்

By Digital Desk 5

16 Aug, 2022 | 09:57 AM
image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எஸ் எல் சி அழைப்பு இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் எஸ் எல் சி ரெட்ஸ் அணி சம்பியனானது.

கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (15) இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் எஸ் எல் சி புளூஸ் அணியை 7 விக்கெட்களால்  வெற்றிகொண்டு ரெட்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

துபாயில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் போட்டிக்கு திறமைவாய்ந்த வீரர்களைத் தெரிவு செய்யும்பொருட்டு நான்கு அணிகளுக்கு இடையிலான இந்த அழைப்பு இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியை எஸ் எல் சி நடத்தியது.

இறுதிப் போட்டியில் 137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எஸ் எல் சி ரெட்ஸ் அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் குவித்த அரைச் சதம் ரெட்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக்கியது.

லசித் குரூஸ்புள்ளே, அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 29 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

குரூஸ்புள்ளே 15 பந்துகளில் 25 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆடுகளம் புகுந்த பானுக்க ராஜபக்ஷ நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். (101 - 3 விக்.)

எனினும் குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களுடனும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

புளூஸ் பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட எஸ் எல் சி புளூஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது.

வழமையான அணித் தலைவர் சரித் அசலன்க, தனுஷ்க குணதிலக்க ஆகிய இருவரும் சுகவீனம் காரணமாக இப் போட்டியில் விளையாடாதது புளூஸ் அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

அசலன்கவுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா தலைமையில் விளையாடிய புளூஸ் அணி பவர் ப்ளே ஓவர்கள் நிறைவடைவதற்கு முன்னர் 2 விக்கெட்களை இழந்து 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. லஹிரு சமரக்கோன் (6), சதீர சமரவிக்ரம (10) ஆகிய இருவரே பவர் ப்ளேக்குள் ஆட்டமிழந்தவர்களாவர்.

தொடர்ந்து சுமாரான வேகத்தில் ஓட்டங்களைப் பெற்ற புளூஸ் அணி சார்பாக ஆரம்ப வீரர் லஹிரு உதாரவும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் 3ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால், தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவசரப்பட்டு முன்னால் நகர்ந்து துனித் வெல்லாலகேயின் பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து எதிரணித் தலைவர் குசல் மெண்டிஸினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த லஹிரு உதார 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (87 - 4 விக்.)

5ஆவது விக்கெட்டில் அஷேன் பண்டாரவுடன் ஜோடி சேர்ந்த ஜனித் லியனகே 42 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த நிலையில் 12 ஒட்டங்களுடன் வெளியேறினார்.

கடைசி ஓவரில் துடுப்பெடுத்தாட வந்த சாமிக்க கருணாரட்ன 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அஷேன் பண்டார 30 பந்துகளில் 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

ரெட்ஸ் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சம்பயியனான ரெட்ஸ் அணிக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெற்ற புளூஸ் அணிக்கு 750,000 ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யார் பலசாலி ? இந்தியாவா ?...

2022-09-25 15:35:12
news-image

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இந்தியா

2022-09-24 09:36:18
news-image

தொடரை வெல்ல அவுஸ்திரேலியாவும் சமப்படுத்த இந்தியாவும்...

2022-09-23 16:38:43
news-image

பாபர் அஸாம் - ரிஸ்வான் அதிரடி...

2022-09-23 09:34:57
news-image

107ஆவது தேசிய டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அஷேன்,...

2022-09-22 20:35:10
news-image

உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய யாப்பு பெரும்பான்மை...

2022-09-22 15:17:50
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2022-09-21 22:58:49
news-image

2022 றக்பி விருது விழாவில் கண்டி...

2022-09-21 21:03:22
news-image

சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரகாசிக்கும் இராணுவ...

2022-09-21 15:30:11
news-image

இலங்கை சைக்கிளோட்ட வீர, வீராங்கனைகள் மூவருக்கு...

2022-09-21 11:26:43
news-image

பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இங்கிலாந்து

2022-09-21 10:00:43
news-image

இந்தியாவை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

2022-09-21 09:59:20