பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துஷ்பிரயோகம் : செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியை கைதுசெய்ய விசாரணை

15 Aug, 2022 | 08:48 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட  பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம்  தொடர்பில் செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியை கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பி.சி.ஏ.டப்ளியூ.பி. எனப்படும்  பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 இந்த விசாரணைகளுக்காக, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர், செவனகல  பொலிஸ் நிலையம் சென்றுள்ள நிலையில், செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்திலிருந்து விசாரணைகளை தவிர்க்க விடுமுறையில் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

செவனகல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள  பயில் நிலை பெண் பொலிஸ்  கான்ஸ்டபிள்,  பாலியல் பலாத்கார சம்பவத்தின் பின்னர் கொழும்புக்கு வந்து பொலிஸ்  சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியக பொறுப்பதிகாரியை சந்தித்து முறைப்பாடளித்துள்ளார். 

இந் நிலையிலேயே இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   அதன்படி நேற்று தினம் ( 14) செவனகலைக்கு சென்றுள்ள பொறுப்பதிகாரி சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர், பாலியல் பலாத்காரம் நடந்த இடம் உள்ளிட்டவற்றை மேற்பார்வைச் செய்து அறிக்கையிட்டுள்ளனர்.

 செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க  சிறுவர் மற்றும் மகளிர்  துஷ்பிரயோக தடுப்பு பணியகம் நடவடிக்கைஎ டுத்துள்ளதாக அறிய முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53