ரோட் சேவ்டி கிரிக்கெட் போட்டியில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் பல புதிய வீரர்கள்

By Digital Desk 5

15 Aug, 2022 | 05:18 PM
image

(என்.வீ.எ.)

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரோட் சேவ்டி (வீதி பாதுகாப்பு) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் பல புதிய வீரர்கள் இணைந்துள்ளனர்.

அசேல குணரட்ன, டில்ஷான் முனவீர, டில்ருவன் பெரேரா, மஹேல உடவத்த ஆகியோர் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர்.

திலக்கரட்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய அணி பயிற்றுநராகவும் செயற்படவுள்ளார்.

இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் உப்புல் தரங்க, நுவன் குலசேகர, தம்மிக்க ப்ரசாத் ஆகியோர் இந்த வருடமும் இடம்பெறவுள்ளனர்.

இவர்களைவிட அஜன்த மெண்டிஸ், மலிந்த வர்ணபுர, ரசல் ஆர்னல்ட், கௌஷல்ய வீரரட்ன, சாமர கப்புகெதர ஆகியோரும் இலங்கை  லெஜெண்ட்ஸ்  அணியில் தொடர்ந்து இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய லெஜெண்ட்ஸ், அவுஸ்திரேலிய லெஜெண்ட்ஸ், இலங்கை லெஜெண்டஸ், மேற்கிந்தியத் தீவுகள் லெஜெண்ட்ஸ், தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ், பங்களாதேஷ் லெஜெண்ட்ஸ், இங்கலாந்து லெஜெண்ட்ஸ், நியூஸிலாந்து லெஜெண்ட்ஸ் ஆகிய 8 அணிகள் இம்முறை போட்டியிடுகின்றன.

முதலாம் கட்டமாக லக்னோவில் செப்டெம்பர் 10 முதல் 15 வரை 7 போட்டிகள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக ஜோத்பூரில் செப்டெம்பர் 16 முதல் 19 வரை 5 போட்டிகள் நடத்தப்படும். கட்டாக்கில் செப்டெம்பர் 21 முதல் 25 வரை 3ஆம் கட்டமாக 6 போட்டிகள் நடத்தப்படும்.

கடைசிக் கட்டமாக ஹைதராபாத்தில் செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை 10 போட்டிகளும் அதனைத் தொடர்ந்து இறுதிச் சுற்றும் நடத்தப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15