நாடு சிக்கலில் இருக்கும்போது இலாபத்தில் ஒரு பகுதியை ஊழியர்களுக்காக ஒதுக்க வேண்டும் - ரணில் வில்அத்தரகே

By Digital Desk 5

15 Aug, 2022 | 07:21 PM
image

(செய்திப்பிரிவு)

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களைப் பாதுகாப்பது தொழில்முனைவோர் என்ற வகையில் நமது பொறுப்பாகும். நாடு சிக்கலில் இருக்கும்போது, வணிக நிறுவனங்கள் தமது இலாபத்தில் ஒரு பகுதியை ஊழியர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று  ஜி.ஃப்லொக் நிறுவனத்தின் தலைவர் ரணில் வில்அத்தரகே தெரிவித்துள்ளார்.

பண்டுவஸ்நுவர - ஒசேகம கிராமத்தில் தனது வர்த்தகக் குழுமத்தின் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொதிக்கான அரிசியைப் பெற்றுக்கொள்ளும் நெல் அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் , நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக ஜி.ஃப்லொக் நிறுவனம் டொலர் வருமானத்தை நாட்டுக்கு ஈட்டிக் கொடுப்பதற்காக இளம் வடிவமைப்பாளர்களின் பங்கேற்புமன் புதிய வர்த்தக வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதோடு , அவற்றை சமூக நலனுக்காகவும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் மக்கள் மீதான சுமையை குறைக்கும் வகையில் அவர்களின் வணிகத்தின் மூலம் செய்யக்கூடிய தொண்டு நிறுவனத்திற்கு பங்களிப்பதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையால், இலங்கையை ஒரு நாடாகவும், குடும்பமாகவும், வணிகமாகவும் தன்னிறைவடையச் செய்யும் இலக்கின் அடிப்படையிலும் , அதற்கு நாம் அளிக்கக்கூடிய பங்களிப்பின் அடிப்படையிலும், அதிக உற்பத்தித் திறனைப் பெற வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலும் இந்த செயற்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சமூக நலனுக்காகச் செயல்படும் அதே வேளையில் இலாபத்தில் ஒரு பகுதியை சமூகத்தில் தேவைகள் காணப்படும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதே எமது நோக்கமாகும். எமது வணிகம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுப்பதாகும். தற்போதைய பொருளாதார நெருக்கடியின் முக்கிய பிரச்சனையான டொலர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பணியில் நமது இளைஞர் குழு வழக்கத்தை விட அதிகமாக செயல்பட்டு வருகிறது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களைப் பாதுகாப்பது தொழில்முனைவோர் என்ற வகையில் நமது பொறுப்பாகும். நாடு சிக்கலில் இருக்கும்போது, வணிக நிறுவனங்கள் தமது இலாபத்தில் ஒரு பகுதியை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பங்களைக் கவனித்து, சமூகம் எதிர்கொண்டுள்ள அழுத்தத்தைத் தடுக்க ஆதரவளிக்க வேண்டும்.

இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாக்க தொழில் முனைவோராகிய நாம் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும். மக்களிடையே சமூக அழுத்தங்களைக் குறைப்பதில் அனைவரும் தலையிட வேண்டும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் காக்க பாடுபட வேண்டும். நமது நாட்டின் தயாரிப்புகள் சர்வதேச சந்தையில் போட்டியிட்டு நமது அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். அதற்கான பொறுப்புகளை நிறைவேற்றுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-30 08:58:20
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை அதிகரிக்கும்

2022-09-30 09:20:17
news-image

திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை...

2022-09-29 21:45:55
news-image

" தற்போதைய அடக்குமுறைகள் மனித உரிமைகள்...

2022-09-29 16:37:02
news-image

மனித உரிமை பேரவையின் தீர்மானம் நியாயமற்றது...

2022-09-29 21:21:18
news-image

பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம்...

2022-09-29 15:11:35
news-image

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம்...

2022-09-29 21:25:13
news-image

ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதி உயர்...

2022-09-29 21:19:57
news-image

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை...

2022-09-29 21:54:43
news-image

பின்தங்கிய கிராமங்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு குருதிச்சோகை -...

2022-09-29 21:22:50
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்...

2022-09-29 21:25:57