கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைமை பதவிகள் எதிர்க்கட்சிக்கு வழங்க பரிந்துரை

By Digital Desk 5

15 Aug, 2022 | 09:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் (கோப்) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றுக்கான தலைவர் பதவிகளை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

அதன்படி கோப் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பனர் எரான் விக்ரமரட்ன , கோபா குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் ஆகியோரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சபாநாயகரிடம் பரிந்துரைத்துள்ளார்.  

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

அதற்கமைய இவ்விரு பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு எதிர்தரப்பின் பிரதம கொறடா லக்ஷமன் கிரியெல்ல சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற அலுவலல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சபையில் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களின் மோசடி மற்றும் செயலாற்றுகை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவது கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் பிரதான கடமையாகும்.

9ஆவது பாராளுமன்றத்தி;ன் 2ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதியால் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 3ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து கோபா மற்றும் கோபா ஆகிய குழுக்கள் கலைக்கப்பட்டன.இரண்டாவது கூட்டத்தொடரின் கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத்,கோபா குழுவின் தலைவராக போராசிரியர் திஸ்ஸ விதாரன ஆகியோர் பதவி வகித்தனர்.

அத்துடன் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷடி சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.             

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50
news-image

மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி

2022-09-25 15:04:57