விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' வசூலில் வெற்றியை பெறுமா..?

By Digital Desk 5

15 Aug, 2022 | 01:59 PM
image

தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படமான 'லைகர்' பட மாளிகையில் வெளியாகி வசூல் சாதனையை படைக்கும் என பட குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

தெலுங்கின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'லைகர்'. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, பொலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். 

இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், மார்க்கரந்த் தேஷ் பாண்டே மற்றும் உலகளவில் பிரபலமான முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்ரம் மான்ட்ரோஸ் இசையமைத்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் எக்சன் டிராமா ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கரண் ஜோகர், பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். 

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்திய மொழிகளில் ஓகஸ்ட் 25 ஆம் திகதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னையிலுள்ள தனியார் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே உள்ளிட்ட படக்குழுவினர் பங்கு பற்றினர்.

படத்தைப் பற்றி விஜய் தேவரகொண்டா பேசுகையில், '' நோட்டா படத்தில் நடிக்கும் போது பட குழுவினருடன் தமிழில் பேசி நிறைய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். அதன் அடிப்படையில் சென்னைக்கு முதன் முதலாக வருகை தந்திருக்கும் நடிகை அனன்யா பாண்டேவிற்கு சில வார்த்தைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராகவும், திக்கி திக்கி பேசும் குணாதிசயம் உள்ளவராகவும் நடித்திருக்கிறேன். 'லைகர்' எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது.  மைக் டைசனுடன் நடித்த அனுபவம் மறக்க இயலாததாக இருந்தது. படப்பிடிப்பின் போது ஒரு முறை அவர் எம்முடைய முகத்தில் குத்து விட்டார். சிறிது நேரம் தலைசுற்றி, நிலை குலைந்தேன். பிறகு சமாளித்து அவருடன் நடித்தேன். இந்த படத்திற்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்று தற்காப்பு கலைகளையும், குத்து சண்டையுடன் கற்றுக் கொண்டேன். ரம்யா கிருஷ்ணனுடன் நடிப்பது சவாலானதாக இருந்தது. அவர் எம்முடைய அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு காட்சியின் போது உண்மையிலேயே கன்னத்தில் அறைந்து விட்டார். இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி ரசிகர்களை போல் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் மரண மாஸான படம்' என்றார்.

‘லைகர்’ படத்தின் விளம்பரத்தில், ‘லயன்’ எனப்படும் சிங்கம், ‘டைகர்’ எனப்படும் புலிஆகிய இரண்டு வீரத்தின் அடையாளமாகக் குறிக்கப்படும் விலங்குகளின் இணைப்பில் பிறந்த நாயகன் தான் ‘லைகர்’, என முன்னிலைப்படுத்தி வருவதால், இந்த படத்தின் எக்சன் காட்சிகள், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. 

'பாகுபலி', 'ஆர். ஆர். ஆர்', 'கே. ஜி. எஃப்' போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட பட்ஜட்களில் தயாராகும் தென்னிந்திய நடிகர்களின் திரைப்படங்கள் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் விளையாட்டு துறை தொடர்பான எக்சன் படைப்பான 'லைகர்' ரசிகர்களால் விரும்பப்பட்டு, வசூலில் சாதனை படைக்குமா..! என்பது விரைவில் தெரியவரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47
news-image

அஞ்சலியின் 'ஃபால்' வலைத்தள தொடரின் ஃபர்ஸ்ட்...

2022-09-17 12:41:18
news-image

அதர்வாவை 'ஜூனியர் கேப்டன்' என புகழாரம்...

2022-09-17 12:03:03
news-image

வெந்து தணிந்தது காடு = திரை...

2022-09-16 13:57:35
news-image

உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்' படபிடிப்பு நிறைவு

2022-09-14 20:20:22