புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கு குணதாச அமரசேகர எதிர்ப்பு

Published By: Rajeeban

15 Aug, 2022 | 12:19 PM
image

பல புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமைக்கான காரணத்தை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என கலாநிதி குணதாச  அமரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள தருணம் எங்களிற்கு கவலையளிக்கின்றது என அவர் தேசிய அமைப்புகளின் சம்மேளனங்களின் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது எனகலாநிதி  குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கைகளால் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சில புலம்பெயர் அமைப்புகள் தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை  குறித்து வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு  அமைச்சும் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன் தங்களுடைய வேண்டுகோள்கள் தொடர்பில் பல வாக்குறுதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்திருந்தார்,தடைநீக்கமும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றா என குணதாச அமரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38