பொதுமக்களை மின்சார கதிரையில் அமர்த்தியுள்ள புதிய மின் கட்டணம்

By Digital Desk 5

15 Aug, 2022 | 11:23 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுமக்களை மின்சார கதிரையில் அமர்த்தியுள்ள புதிய மின்கட்டண திருத்தம் மீதான விவாதம் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மீள் திரும்பல் வரவு –செலவு திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்கட்டண திருத்தம் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை எந்தளவிற்கு சாத்தியமாகும் என்பது நிச்சயமற்றது.இலங்கை மின்சார சபையின் 612 பில்லியன் நட்டம் புதிய மின்கட்டண திருத்தம் ஊடாக மின்பாவனையாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 78 இலட்சம் மின்பாவனையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலக்கரி மற்றும் எரிபொருளின் விலை அதிகரிப்பு , இலங்கை மின்சார சபையின் தொடர்ச்சியான நட்டம் ஆகிய காரணிகளினால் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின்கட்டணம் கடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய மின்கட்டண திருத்தம் மின்கட்டண படிவம் கிடைத்தவுடன் பேரதிர்ச்சியாக இருக்கும்.

இலங்கை மின்சார சபையின் 612 பில்லியன் கடன் இறுதியில் மின்பாவனையாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. புதிய மின்கட்டண திருத்தம் போதுமானதாக அமையவில்லை என இலங்கை மின்சார சபை மறுபுறம் குறிப்பிடுகிறது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின்கட்டண திருத்தம் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தாலும் , இதுவரையில் நடைமுறைக்கு சாத்தியமான எத்திட்டங்களையும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு முன்வைக்கவில்லை. 

மீள்திரும்பல் இடைக்கால வரவு செலவு திட்டத்தில் மின்பாவனையாளர்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றில் குறிப்பிட்டார்.

ஏரிபொருள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாளாந்தம் பகல் பொழுதில் ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது.

 கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மின்பாவனைக்கான கேள்வி குறைவடைந்துள்ளது.நாளாந்த மின்விநியோக துண்டிப்பினால் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகள் மற்றும் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளமை புதிய விடயமல்ல.

ஒரு புறம் மின்விநியோக தடை மறுபுறம் மின்கட்டண அதிகரிப்பு,நாட்டு மக்களின் தற்போதைய நிலை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல் ஆகிவிட்டது. மின்சார சபை எதிர்க்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு மின்கட்டண அதிகரிப்பை தவிர்த்து மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்கள் மாத மின்கட்டணத்தை செலுத்தாவிடின் சிவப்பு அட்டை அனுப்பி மின்விநியோகத்தை துண்டிக்கும் இலங்கை மின்சார சபை பல மில்லியன் கணக்கிலான மின்கட்டணத்தை செலுத்தாமலிருக்கும் அரசியல்வாதிகள் குறித்து அவதானம் செலுத்தாமலிருப்பது வேடிக்கையாகவுள்ளது.

புதிய கட்டண திருத்தம் தொழினுட்ப ரீதியில் தயாரிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழினுட்ப சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.மின்சார சட்டத்தின் 30ஆவது உறுப்புரைக்கு முரனாக மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மின்பாவனையாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.புதிய மின்கட்டண திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ரூபாவிற்கு கணிப்பிடல்.

புதிய மின்கட்டண திருத்தத்தின் ஊடாக மின்பாவனையாளர்கள் மின்கதிரையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.ஆகவே மின்கட்டண திருத்தம் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் ஆகவே மின்கட்டண திருத்தம் தொடர்பில் விவாதம் அவசியம் என எதிர்தரப்பின் பிரதம கொறடா சபாநாயகரிடம் வலியுறுத்தினார் அதற்கமைய எதிர்வரும் 29ஆம் திகதி மின்கட்டண திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின்...

2022-09-29 11:55:39
news-image

அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை...

2022-09-27 11:20:56
news-image

கலைக்கூடமாகும் ஜனாதிபதி மாளிகை

2022-09-22 13:34:39
news-image

ஜனாதிபதி ஆட்சிமுறையை நியாயப்படுத்தும் ஜே.ஆரின் பேரப்பிள்ளை

2022-09-22 10:39:18
news-image

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித...

2022-09-20 13:39:22
news-image

முட்டாள் தனமான யோசனைகளை தவிருங்கள் !...

2022-09-19 11:00:38
news-image

ஜெனீவாவில் இந்திய நிலைப்பாடு

2022-09-14 16:23:39
news-image

தேசிய, சர்வதேச கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை

2022-09-13 15:12:48
news-image

மக்கள் ஆணையைக்கொண்ட அரசின் தேவை குறித்து...

2022-09-07 13:21:06
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பொருளாதார...

2022-09-06 19:09:58
news-image

அவமானங்கள், துன்பங்களால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்ட...

2022-09-07 15:08:17
news-image

அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் திண்டாடும் இலங்கை...

2022-09-05 15:16:12