மினரல் வாட்டர் அருந்துவது நல்லதா? இல்லையா?

Published By: Robert

25 Dec, 2015 | 10:44 AM
image

எம்மில் பலரும் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு சென்று வருவது சர்வசாதாரணமாகி விட்டது. இந்தியாவில் மினரல் வாட்டர் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. மத்தியத்தர வகுப் பினர் இதனை தினந்தோறும் அருந்துகின்றனர். இங்கு கூட சுற்றுலா பயணிகளுக்காக மினரல் வாட்டர் கிடைக்கிறது. இந்நிலையில் மினரல் வாட்டர் அருந்துவது நல்லதா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து வருகிறது.

முன்பெல்லாம் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள், குளங் கள், நீர் தேக்கங்கள் என பல வடி வங்களில் நீர் சேமிக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக கிடைத்தன. ஆனால் இன்றோ சுற்று சூழல் மாசின் காரணமாக தண்ணீர் ரசாயனம் கலக்கப்பட்டே கிடைக்கிறது.சுத்தமான தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிட்டது. இந்நிலையில் நல்ல தண்ணீரை பெறுவது எப்படி? என்று கூட சிலர் கேட்கத் தொடங்கிவிட்டனர். தொழிற்சாலைகளின் எண் ணிக்கை அதிகரிப்பு, தொழிற் சாலைகளின் கழிவுகள், காடுகள் அழிப்பு, சுற்று சூழலில் மாசடைந்த காற்று இவற்றால் நல்ல தண்ணீர் வளங்கள் அழிந்து, குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது.

மற்றொரு புறம் தாராளமயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல் போன்ற வணிகக் கொள்கைகளில் தண்ணீர் ஒரு வணிக பொருளாக பாவிக்கும் போக்கு ஏற்பட்டுவிட்டது. இதனால் கொர்ப்பரேட் முதலாளிகள் உலகம் முழுவதும் நல்ல தண்ணீர் பற்றாகுறை என்று கூறி, மினரல் வாட்டரை தயாரித்து, அதனை லாபத்துடன் விற்கத் தொடங்கி விட்டனர்.

இவர்கள் தயாரிக்கும் மினரல் வாட்டரில் தான் ஆர்கட்னாகுளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற நச்சு பூச்சிக் கொல்லி மருந்துகள் கலக்கப்படுகிறது. இதை அருந்தினால் புற்று நோய் ஆபத்து வரக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. அப்படி யானால் எம்மால் சுத்தமான குடிநீரை அருந்த இயலாதா? என கேட் கலாம். இன்றைய திகதியில் நாம் நல்ல தண்ணீரை அருந்த வேண்டும் என்றால், கிடைக்கும் தண்ணீரை தரமான ஃபில்டர் ஒன்றை வைத்து சுத்திகரித்துக் கொண்டு, அதன் பின் அதனை சூடவைத்து ஆற வைத்து குடிப்பதே சிறந்தது. ஒரு சிலர் இதற்கும் மேல் சென்று அந்த தண்ணீரில் சிறிது சீரகத்தையோ அல்லது பெருஞ்சீரகத்தையோ போட்டு வைத்துக் கொண்டு அதனை அருந்தினால் உட லுக்கும் வயிற்றுக்கும் எந்த பின்விளைவும் வராது. தண்ணீரும் சுத்த மாக இருக்கும்.

டாக்டர் இந்திரா

ஊட்டச்சத்து நிபுணர்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40
news-image

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

2023-05-20 13:59:49
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7...

2023-05-20 14:00:24
news-image

காது… மூக்கு… தொண்டை… பிரச்சினைகள்

2023-05-19 14:36:24
news-image

நடைப்பயிற்சி நல்லது!

2023-05-19 13:00:50
news-image

சிறுநீர் காட்டும் உடல் ஆரோக்கியம்!

2023-05-19 12:43:45