தனது திருமண வைபவத்தில் தனக்கு பதிலாக சகோதரரை பங்குபற்ற வைத்த கால்பந்தாட்ட வீரர்

By Digital Desk 5

15 Aug, 2022 | 10:21 AM
image

ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த கால்­பந்­தாட்ட வீரர் ஒருவர், தனது திரு­மண வைப­வத்தில் பங்­கு­பற்ற முடி­யாத நிலையில், தனக்கு பதி­லாக தனது சகோ­த­ரனை அவ்­வை­ப­வத்தில் பங்­கு­பற்றச் செய்­துள்ளார்.

மொஹம்மத் புயா துராய் எனும் 27 வய­தான கால்­பந்­தாட்ட வீரர் ஆபி­ரிக்க நாடான சியாரா லியோனைச் சேர்ந்­தவர். 6 சர்வ­தேச போட்­டி­க­ளிலும் பங்­கு­பற்­றி­யுள்ளார்.

சீனாவின் பிர­பல கால்­பந்­தாட்டக் கழ­கங்­களில் ஒன்­றான ஹெனான் சோங்ஷான் லோங்மென் கழ­கத்தில் இவர் விளையாடி வந்தார்.  அண்­மையில் அவர் சுவீ­டனின் மெல்மே கால்­பந்­தாட்டக் கழ­கத்­துக்கு இடம்­மாற்­றப்­பட்டார்.  இதற்கிடையில் துராயின் திரு­மண திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

தனது கழ­கத்தில் இணையும் புதிய வீரர்கள், ஐரோப்­பிய கழ­கங்­களின் தகு­திகண் போட்­டி­க­ளுக்­காக பயிற்சி முகாமில் இணைய வேண்­டிய  தின­மாக ஜூலை 21 ஆம் திக­தியை மெல்மோ கழக நிர்­வாகம் அறி­வித்­தி­ருந்­தது. அதே தினத்­தி­லேயே துராயின் திரு­ம­ணமும் சியாரா லியோனில் நடத்தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தத.

தனது கால்­பந்­தாட்ட வாழ்க்­கையின் திருப்­பு­மு­னை­யாக அமையும் சுவீடன் கழ­கத்தில் இணை­வதா தனது திரு­மண வைபவத்தை திட்­ட­மிட்­ட­படி நடத்­து­வ­தாக என துராய் குழம்­பினார். இது தொடர்­பாக தனது எதிர்­கால மனை­வி­யுடன் கலந்து­ரை­யா­டி­ய­போது,

மெல்மோ கழ­கத்­தி­ன­ரையும் திருப்­தி­ப­டுத்தும் அதே­வேளை, தனது திரு­மண வைப­வத்­தையும் குழப்­பாமல் இருப்­ப­தற்­காக துராயும் அவரின் மண­ம­களும் இணைந்து திட்­ட­மொன்றை தீட்­டினர்.

இது தொடர்­பாக மொஹம்மத் புயா துராய் கூறு­கையில், 

'நான் சுவீ­ட­னுக்குச் செல்­வ­தற்கு முன்­ன­தாக, திரு­மண வைபவ புகைப்­ப­டங்­களை நாம் முன்­கூட்­டியே பிடித்துக்கொண்டோம். எனவே நான் அவ்­வை­ப­வத்தில் பங்­கு­பற்­றாத போதிலும், அங்கு இருந்தைப் போல் தோன்­றி­யது' எனத் தெரி­வித்­துள்ளார்.

திரு­மண வைப­வத்தில் தனக்கு பதி­லாக தனது சகோ­த­ரரை பங்­கு­பற்றச் செய்­தாராம் துராய். 

திரு­மண வைப­வத்தின் பின்­னரும் துராயை அவரின் மனைவி இன்னும் நேரில் சந்­திக்­க­வில்லை. மெல்­மோ­க­ழ­கத்­துக்­காக உற்­சா­க­மாக கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் துராய் பங்­கு­பற்றி வரு­கிறார். மெல்மோ கழ­கத்­துக்­காக அவர் பங்­கு­பற்­றய முதல் போட்­டியில் அக்­க­ழகம் 3:0 கோல்­களால் வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது தனது மனை­வியை சுவீ­ட­னுக்கு அழைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­ளிலும் தீவி­ர­மாக அவர் ஈடு­பட்­டுள்ளார். 

சுவீ­டனின் மெல்மோ நக­ருக்கு அழைத்­து­விட்டால், அவர் என்­னோடு நெருக்­க­மாக இருக்கலாம். இது தான் இப்போதைய எனது இலக்கு என்கிறார் துராய்.

ஆனால், தேனிலவை அவர் ஒத்திவைத்துள்ளார்.

'முதலில் நாம் லீக் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதன் பின்னர் நான் தேனிலவுக்குச் செல்வேன்' என்கிறார் மொஹம்மத் புயா துராய்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேக்கில் வடிவமைக்கப்பட்ட சுயவிபரக்கோவை

2022-09-28 12:52:07
news-image

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்...

2022-09-27 12:33:32
news-image

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கணினிப் பொறியியலாளர்

2022-09-13 13:28:24
news-image

டுபாயில் நிலவு வடிவில் பிரம்மாண்டமாக சொகுசு...

2022-09-13 11:39:02
news-image

இரு தந்­தை­யர்­களைக் கொண்ட இரட்டைக் குழந்­தை­களை...

2022-09-08 12:34:41
news-image

உட­லு­றவில் ஈடு­பட்­டி­ருந்­த­போது கார் கடத்­தப்­பட்­டதால் நிர்­வா­ண­மாக...

2022-09-05 13:06:29
news-image

மண்டபம் அகதிகள் முகாமில் திருடர்களுக்காக வைக்கப்பட்ட...

2022-09-02 19:31:27
news-image

யுவ­தியை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்ட குரங்கு

2022-09-01 14:12:54
news-image

ராட்சத பூசனியில் அமர்ந்தபடி 61 கி.மீ...

2022-08-30 16:46:56
news-image

பேக்கரிகள் யாழில் மூடப்படும் அபாய நிலை...

2022-08-29 20:59:45
news-image

தேனி­ல­வின்­போது பாலியல் தொழி­லா­ளியை நாடிச் சென்­றவர்...

2022-08-29 11:36:30
news-image

700 ஆண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாகக்...

2022-08-29 11:33:44