பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட பதவிகளை முழுமையாக மறுசீரமைக்க தீர்மானம் 

By T Yuwaraj

14 Aug, 2022 | 10:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட பதவிகளை முழுமையாக மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற கட்சி மாநாட்டில் இத்தீர்மானம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸை பதவியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள்  அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தவிசாளராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறும்,தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்கமாறும் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ கட்சியின் முக்கிய பதவிகள் ஏதும் வகிக்காமல்,கட்சியின் ஆலோசகராக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் 6ஆவது வருட நிறைவு மாநாட்டில்  கட்சியின் உத்தியோகப்பூர்வமான பல தீர்மானங்கள் அறிவிக்கப்படும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சுப்பதவிகளை அதிகரிக்க அரசாங்கத்திற்கு இருக்கும் உரிமை...

2022-12-09 17:21:08
news-image

இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ...

2022-12-09 21:06:09
news-image

3 பில்லியன் டொலராக வெளிநாட்டு கையிருப்பை ...

2022-12-09 17:24:21
news-image

டயனா கமகே தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள்...

2022-12-09 21:05:22
news-image

ஓய்வூதிய வயது 61 என்ற தீர்மானத்தை...

2022-12-09 13:43:10
news-image

ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சொகுசு மெத்தை...

2022-12-09 17:12:08
news-image

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது...

2022-12-09 13:42:09
news-image

நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய...

2022-12-09 19:47:17
news-image

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்...

2022-12-09 16:38:53
news-image

கூட்டமைப்பினரை எதிர்த்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் உதய...

2022-12-09 11:32:18
news-image

காற்று மாசடைவில் கணிசமான மாற்றம் :...

2022-12-09 13:45:15
news-image

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் :...

2022-12-09 16:47:25