எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

Published By: Digital Desk 4

14 Aug, 2022 | 08:43 PM
image

(என்.வீ.ஏ.)

ஆசிய கிண்ண கிரிக்கெட் (இ20) சுற்றுப் போட்டிக்கு முன்னோடியாக இருபது 20 கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு போதிய பயிற்சியைப்  பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எஸ்.எல்.சி அழைப்பு இருபது 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நாளை திங்கட்கிழமை இரவு மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் குசல் மெண்டிஸ் தலைமையிலான எஸ்.எல்.சி. ரெட்ஸ் அணியும் தனஞ்சய டி சில்வா தலைமையிலான எஸ்.எல்.சி. புளூஸ் அணியும் விளையாடவுள்ளன.

4 அணிகள் பங்குபற்றிய எஸ்.எல்.சி. அழைப்பு இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ரெட்ஸ் அணியும் புளூஸ் அணியும் தலா 2 வெற்றிகளுடன் தலா 4 புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

நடந்து முடிந்த போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்திய துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சு ஆற்றல்களின் அடிப்படையில் ரெட்ஸ் அணி பலம் வாய்ந்ததாகத் தென்படுகிறது.

அணித் தலைவர் குசல் மெண்டிஸ் 3 போட்டிகளில் ஒரு அரைச் சதம் உட்பட 150 ஓட்டங்களை மொத்தமாக பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார்.

அவரது அணியைச் சேர்ந்த வனிந்து ஹசரங்க டி சில்வா, எல். குரூஸ்புள்ளே, பானுக்க ராஜபக்ஷ, கமிந்த மெண்டிஸ் ஆகியோர் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ (8 விக்கெட்கள்), மஹீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க டி சில்வா, மதீஷ பத்திரண ஆகியோர் திறமையாக செயற்பட்டுள்ளனர்.

புளூஸ் அணி சார்பாக அஷேன் பண்டார, வழமையான அணித் தலைவர் சரித் அசலன்க, உதார இகலகமகே, சதீர சமரவிக்ரம ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம, சுமிந்த லக்ஷான் பெர்னாண்டோ, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் ஓரளவு பிரகாசித்துள்ளனர்.

எவ்வாறாயினும் புளூஸ் அணியின் முக்கிய வீரர்களான சரித் அசலன்க, தனுஷ்க குணதிலக்க ஆகிய இருவரும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதால் நாளைய இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கவுக்குப் பதிலாக தனஞ்சய டி சில்வா தலைவராக விளையாடவுள்ளார்.

அணிகள்

எஸ்.எல்.சி. ரெட்ஸ்: லசித் குரூஸ்புள்ளே, குசல் மெண்டிஸ் (தலைவர்), பானுக்க ராஜபக்ஷ, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க டி சில்வா, துனித் வெல்லாலகே, லஹிரு மதுஷன்க, மதீஷ பத்திரண, மஹீஷ் தீக்ஷன, சஹான் ஆராச்சிகே, அசித்த பெர்னாண்டோ, ப்ரபாத் ஜயசூரிய, கலன பெரேரா, எஸ்.எல்.சி. புளூஸ்: சித்தார கிம்ஹான், லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா (தலைவர்), அஷேன் பண்டார, சாமிக்க கருணாரட்ன, லஹிரு சமரக்கோன், சுமிந்த லக்ஷான், கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷன்க, ப்ரவீன் ஜயவிக்ரம, ப்ரமோத் மதுஷான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - அவுஸ்திரேலியா மகளிர் ரி20...

2024-10-05 15:13:56
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் 18வயதின் கீழ்...

2024-10-04 19:15:40
news-image

பந்துவீச்சில் மிலாபா, துடுப்பாட்டத்தில் லோரா, தஸ்மின்...

2024-10-04 19:02:14
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2024-10-04 01:43:15
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் 10...

2024-10-03 23:07:14
news-image

கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும்  ஐ.சி.சி....

2024-10-03 10:51:18
news-image

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில்...

2024-10-01 13:04:04
news-image

தினுர, விஷ்மி அதிசிறந்த பாடசாலைகள் கிரிக்கெட்...

2024-09-30 20:42:17
news-image

நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக்...

2024-09-29 18:13:23
news-image

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஓர்...

2024-09-29 13:33:58
news-image

பங்களாதேஷுடனான உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில்...

2024-09-29 12:46:01
news-image

சனத் ஜெயசூரிய இலங்கை அணியின் தலைமை...

2024-09-29 12:21:55