ஹரூன், காயா, ரேஷான், ரதிஸ் காந்த் சகோதரர்கள் சம்பியனாகினர்

By Digital Desk 5

14 Aug, 2022 | 04:53 PM
image

(என்.வீ.ஏ.)

றோயல் கலம்போ கோல்வ் க்ளப் புல்தரையில் வெள்ளியன்று நடைபெற்ற இலங்கை கனிஷ்ட கோல்வ் சம்பியன்ஷிப் போட்டியில் ஹரூன், காயா, ரேஷான், ரதிஸ் காந்த் சகோதரர்கள் - தேஜஸ் மற்றும் யுவன், ஆகியோர் தத்தமது பிரிவுகளில் சம்பியன் பட்டங்களை சுவீகரித்தனர்.

ருக்மணி கோதாகொட கிண்ணங்களுக்காக நடத்தப்பட்ட ஆண்களுக்கான தங்கப் பிரிவு கோல்வ் போட்டியில் ஹரூன் அஸ்லாமும் பெண்களுக்கான தங்கம் மற்றும் வெள்ளிப் பிரிவில் காயா தலுவத்தவும் சம்பியனாகினர்.

ஆண்களுக்கான வெள்ளிப் பிரிவில் ரேஷான் அல்கம, வெண்கலப் பிரிவில் தேஜஸ் ரதிஸ் காந்த், செப்புப் பிரிவில் யுவன் ரதிஸ் காந்த் ஆகியோர் சம்பியனாகினர்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான தங்கப் பிரிவு இறுதிப் போட்டியில் கே. தனுஷனை 2 - 1 என ஹரூன் அஸ்லாம் வெற்றிகொண்டு ருக்மணி கோதாகொட கிண்ணத்தை சுவீகரித்தார்.

பெண்களுக்கான தங்கம் மற்றும் வெள்ளிப் பிரிவு இறுதிப் போட்டியில் ஷெரின் பாலசூரியவை 2 - 1 என காயா தலுவத்த வெற்றிகொண்டு ருக்மணி கோதாகொட கிண்ணத்தை சுவீகரித்தார்.

ஆண்களுக்கான வெள்ளிப் பிரிவில் ஜேக்கப் நோர்ட்டனை 5 - 3 என வெற்றிகொண்ட ரேஷான் அல்கம சம்பியனானார்.

வெண்கலப் பிரிவில் சக்கீப் சுஹாரை 8 - 7 என வெற்றிகொண்ட தேஜஸ் ரதிஸ் காந்த் சம்பியன் பட்டத்தை சூடினார்.

செப்புப் பிரிவில் டனிக் தலுவத்தவை 5 - 3 என வெற்றிகொண்ட தேஜஸின் இளைய சகோதரர் யுவன் ரதிஸ் காந்த் சம்பியனானார்.

பெரேரா அண்ட் சன்ஸ் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இலங்கை கனிஷ்ட கொல்வ் சம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசளிப்பு வைபவத்தில் ருக்மணி கோதாகொட குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது இந்தியா

2022-09-29 13:41:18
news-image

கொழும்பில் திபப்பரே கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி...

2022-09-29 13:37:01
news-image

இங்கிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டது பாகிஸ்தான்

2022-09-29 11:10:17
news-image

இந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை தமது...

2022-09-28 23:01:57
news-image

இருபதுக்கு - 20 ஆசியக் கிண்ண...

2022-09-28 15:00:27
news-image

17 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் : கண்டி...

2022-09-28 15:21:58
news-image

வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு...

2022-09-28 10:36:28
news-image

தற்போதைய நிலை நீடித்தால் ஓரிரு நாட்களில்...

2022-09-27 22:19:57
news-image

7 இலங்கை அணி வீரர்கள் களமிறங்கவுள்ள ...

2022-09-27 16:50:35
news-image

மரதனில் சொந்த உலக சாதனையை கிப்சோகே...

2022-09-26 15:07:13
news-image

கபடி போட்­டி­யா­ளர்­க­ளுக்கு கழி­வ­றையில் வைத்து உணவு...

2022-09-26 13:15:07
news-image

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது சர்வதேச இருபது...

2022-09-26 11:27:15