ரணில் விக்ரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கம் வெறும் கண்துடைப்பு - விஜித்த ஹேரத்

By Digital Desk 5

14 Aug, 2022 | 10:28 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய அரசாங்கம் என்பது அரசாங்கத்தின் கண்துடைப்பு. அவ்வாறான கொள்கை ஜனாதிபதிக்கு இல்லை. மாறாக வேறு கட்சிகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை கொண்டுசெல்வதே இவர்களின் நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில்  மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வகட்சி அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்து அதற்காக பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியல் கட்சிகளையும் அழைத்து இதுதொடர்பகா ஜனாதிபதி   கலந்துரையாடி இருந்தார். ஆனால் சர்வகட்சி அமைப்பது இவர்களின் நோக்கம் இல்லை.

அப்படியாக இருந்தால், சர்வகட்சிக்கு தேவையான வேலைத்திட்டத்தை அமைத்திருப்பார்கள். அவ்வாறான எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை.

அதனால்   சர்வகட்சி அமைப்பது சாத்தியமில்லை.  அது வெறும் கண்துடைப்பு. அதற்கான கொள்கையும் ஜனாதிபதிக்கு இல்லை. வேறு கட்சிகளில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை  விலைக்கு வாங்கி, அவர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கி அரசாங்கத்தை ஸ்திரப்படுத்துவதே இவர்களின் திட்டமாகும்.

அதன் பிரகாரமமே தற்போது அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அந்த திருத்தத்தில் தேசிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால், அதன் அமைச்சரவையின் எண்ணி்க்கையை அரசாங்கம் தீர்மானித்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை நிர்வகிக்க மேற்கொள்ளும் திட்டமாகும்.

அவ்வாறு இல்லாமல் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணவோ மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவோ சர்வகட்சி அமைத்து நிர்வகிக்கும் கொள்கையும் இல்லை.

அதற்கான வேலைத்திட்டமும் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை. மாறாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, தங்களின் சகாக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி பதவிக்கு வந்து, தற்போது தனக்கு உதவி செய்தவர்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான முறையில் நாட்டை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருக்கின்றார். பாராளுமன்றத்திலும் இன்று மக்கள் ஆணைக்கு முரணான திரிவுபட்ட பெரும்பான்மையே இருந்து வருகின்றது.

அதனால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதாக இருந்தால், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக இருந்தால், ஆரம்பமாக நாங்கள், மக்கள் ஆணையை திரிவுபடுத்தி இருக்கும், திரிவுபடுத்தப்பட்ட பாராளுமன்றத்தை கலைத்து, மக்கள் வரத்துடன் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும். அதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க  மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் நிலையான தீர்வொன்றை கொண்டுவரப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53