பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது - சந்திம வீரக்கொடி

By Digital Desk 5

14 Aug, 2022 | 10:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது.சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் அல்லது பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பகுதியில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வக்கட்சி அரசாங்கத்தின் நோக்கம் தற்போது திரிபுப்படுத்தப்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சர்வக்கட்சி அரசாங்கத்தில் பிரதான பங்காளி கட்சியாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தையும்,அதன் தலைவர்களையும் நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளார்கள்.

பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது.பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து வெளிப்படைத்தன்மையுடனான சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் அல்லது பொதுதேர்தலை நடத்த வேண்டும்.மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காத காரணத்தினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேரிட்டது.

மக்களின் போராட்டம் நிறைவடைந்து விட்டது என ஒருபோதும் கருத முடியாது.ஜனநாயக போராட்டம் எந்நிலையிலும் தோற்றம் பெறும்.தற்போதைய அரசாங்கம் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து செயற்பட்டால் எவ்வித பிரச்சினைகளுமின்றி அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்லவாம்.

அவசரகால சட்டத்தை கொண்டு ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முடக்கினால் ஒருபோதும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியாது.மக்களின் ஆதரவு இல்லாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.ஆகவே அவசரகால சட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53
news-image

உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து...

2022-09-25 16:44:50