ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவால் பிற்போடப்பட்ட மீளாய்வுக் கூட்டம் : அரசாங்கத்தின் கோரிக்கை காரணமாவென மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்

Published By: Digital Desk 5

14 Aug, 2022 | 10:18 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் பிரயோகிக்கப்படும் முறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் குழுவினால் எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படவிருந்த மீளாய்வு பிற்போடப்பட்டிருப்பதுடன், அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே மீளாய்வைப் பிற்போடுவதற்கான இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஐ.சி.சி.பி.ஆர் என்று பரவலாக அறியப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் ஒவ்வொரு நாடுகளிலும் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றது, அதன் பயன்பாடு எவ்வாறானதாக அமைந்திருக்கின்றது என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் குழுவினால் 4 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும்.

அந்தவகையில் இலங்கையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் பிரயோகிக்கப்படும் முறை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்தப்படுமென ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் குழுவினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அதனை முன்னிறுத்தி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் கோரப்பட்டிருந்தது.

இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரயோகம் தொடர்பான மீளாய்வு மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளுக்கு மின்னஞ்சல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், எனவே அவர்கள் மீண்டும் இச்சட்டத்தின் பிரயோகம் பற்றிய புதிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டியேற்படலாம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் சிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பொறுத்தமட்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டப்பிரயோகம் தொடர்பான மீளாய்வு மிகமுக்கியமானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள பெண்கள் தொடர்பான செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகரும் பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷ்ரீன் ஸரூர், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற நிலையைக் காரணங்காட்டி தாம் நிறைவேற்றவேண்டிய மனித உரிமைகள்சார் கடப்பாடுகளிலிருந்து நழுவிச்செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கள் மற்றும் அழுத்தங்களிலிருந்து விடுபட்டு நழுவிச்செல்வதற்கு ஏதுவான பாதையையே இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்திருப்பதாகவும், ஆனால் அதற்கு மாறாக மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தத்தைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02