விசாரணைகள் மூழ்கடிக்கப்படுகின்றன : நீதியை நிலைநாட்டும் பொறிமுறையை நோக்கி நாட்டை இட்டுச் செல்லுங்கள் - பேராயர் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை

By Digital Desk 5

14 Aug, 2022 | 10:09 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டில் இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக விசாரணைகள் முழ்கடிக்கப்படுகிறது. மேலும் வெளிப்படைத் தன்மையுடன் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையை நோக்கி நாட்டை இட்டுச்செல்லுமாறு கொழும்பு பேராயர் மெல்கம்  கர்தினால்  ரஞ்சித் ஆண்டகை ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பரிசுத்த பாப்பரசர் வழங்கிய ஒரு இலட்சம் யூரோ நிதியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,

நாட்டில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் இரண்டு வாரங்களுக்குள் அதை மறந்து விடும் மிக மோசமான கலாச்சாரம் இலங்கையில் உள்ளது.

நாட்டில் இடம்பெற்ற கொலைகள் பயங்கரவாத தாக்குதல்கள், பஸ் குண்டுத்தாக்குதல்கள், ரயில் குண்டுகள் தாக்குதல்கள், அரசியல் தலைவர்கள் கொள்ளப்பட்டமை, யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள், போன்ற சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு வாரங்களில் அனைத்தையும் மறந்து போகும் நிலை இலங்கையில் உள்ளது.

எமது நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற கொலைகள் கடத்தல் தொடர்பாக எந்தவொரு அரசாங்கமும் சரியான விதத்தில் விசாரணைகளை நடத்தவில்லை. விசாரணைகளை நடத்துவதற்கு இடமளிக்கவும் இல்லை. விசாரணைகளை நடத்துமாறு கோரும் சந்தர்ப்பங்களில் அவற்றை எப்படியாவது மூழ்கடித்து நிலவிரிப்பின் கீழ் மறைப்பதற்கு எமது தலைவர்கள் எப்போதும் முயற்சிக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு அதுவே நடந்து இருக்கிறது. நாட்டின் சட்டம் தொடர்பான நிறுவனங்கள் சுயாதீனமாக செயல்பட வேண்டும். பொலிஸ் பிரிவும் சுயாதீனமாக செயல்பட வேண்டும்.

எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நாட்டில் உள்ள தற்போது உள்ள முறைமை மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லை எனின் நாளை ஏதேனும் தாக்குதல் இடம்பெற்றால் அவற்றுக்கும் இதே நிலைமை ஏற்படும்.

இதன் காரணமாக நாட்டில் முறைமை மாற்றம் வேண்டும் என்று நாம் கோறுகிறோம். சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

எமக்கு அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய தேவை கிடையாது.எமக்கு நீதி வேண்டும் தயவு செய்து வெளிப்படைத் தன்மையுடன் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையை நோக்கி நாட்டை இட்டுச் செல்லுங்கள் உங்களுக்காக அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலின் முழுமையான சர்வாதிகாரம் இப்போது வெளிப்படுகிறது...

2022-09-25 21:09:49
news-image

தேசிய பாதுகாப்பிற்காகவே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள்...

2022-09-25 21:14:01
news-image

போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாக...

2022-09-25 22:04:58
news-image

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பயன்பாடு...

2022-09-25 23:37:25
news-image

இலவச சுகாதாரத்துறையை தனியார் துறையுடன் இணைந்து...

2022-09-25 21:47:45
news-image

பெரும்போக அறுவடையின் பின் அரிசி இறக்குமதிக்கான...

2022-09-25 21:21:38
news-image

ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்களுக்கு பிணை

2022-09-25 22:41:21
news-image

காட்டுப்பகுதியிலிருந்து உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில்...

2022-09-25 20:54:53
news-image

கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மீட்பு

2022-09-25 21:57:16
news-image

நாட்டை வந்தடைந்தார் ஐக்கிய நாடுகள் சபையின்...

2022-09-25 16:50:48
news-image

ஜனாதிபதி நாளை ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு...

2022-09-25 16:50:00
news-image

மட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழிகள், நாய்...

2022-09-25 17:01:53