(நெவில் அன்தனி)
இலங்கை டென்னிஸ் சங்க களிமண் தரை டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கடல்சூழ் (ஆசிய/ஓஷானியா) பிராந்தியத்துக்கான டேவிஸ் கிண்ண 4ஆம் குழு இறுதிப் போட்டியில் ஈராக்கை வீழ்த்திய இலங்கை 3ஆம் குழுவுக்கு தரம் உயர்த்தப்பட்டது.
தத்தமது குழுக்களில் தோல்வி அடையாத அணிகளாக இலங்கையும் ஈராக்கும் மோதிக்கொண்ட இறுதிப் போட்டியில் 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்று தரமுயர்வைப் பெற்றது.
இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள், ஓர் இரட்டையர் ஆட்டம் என 3 ஆட்டங்கள் கொண்ட இறுதிப் போட்டியில் முதலிரண்டு ஒற்றையர் ஆட்டங்களிலும் இலங்கை வெற்றிபெற்றதால் இரட்டையர் ஆட்டத்துக்கு அவசியம் ஏற்படவில்லை.
முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஈராக் வீரர் அப்துல்லா அலியை 6 - 4, 6 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இலங்கை வீரர் யசித்த டி சில்வா வெற்றிகொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஈராக் வீரர் ஆதில் முஸ்தபாவை 6 - 3, 6 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இலங்கையின் மூத்த, அனுபவசாலியான ஹர்ஷன கொடமான்ன இலகுவாக வெற்றிகொண்டு 3ஆம் குழுவுக்கு இலங்கை தரமுயர்வதை உறுதி செய்தார்.
இறுதிப் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற ஏ குழுவுக்கான லீக் சுற்றில் கஸக்ஸ்தானையும் பங்களாதேஷையும் 3 நேர் செட்களில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது. இப் போட்டியில் இலங்கை ஒரு செட்டிலும் தொல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வெற்றிபெற்ற இலங்கை அணியில் ஹர்ஷன கொடமான்ன, யசித்த டி சில்வா, சத்துரிய நிலவீர, தெஹான் சஞ்சய விஜேமான்ன, அஷேன் மினோஜ் ஜூலான் சில்வா ஆகியோரும் விளையாடாத அணித் தலைவர் உதித் விக்ரமசிங்கவும் இடம்பெற்றனர்.
இலங்கை அணிக்கு ரெனூக் விஜேமான்ன பயிற்சி அளித்ததுடன் கொமடோர் ப்ரதீப் கருணாதிலக்க அணி முகாமையாளராக செயற்பட்டார்.
இதேவேளை கடந்த 20 வருடங்களாக இலங்கை டென்னிஸ் அணியில் இடம்பெற்று பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த மூத்த வீரர் ஹர்ஷன கொடமான்ன (37 வயது) டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM