மட்டு நகரில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு – இரு  சந்தேகநபர்கள் கைது 

Published By: Digital Desk 4

14 Aug, 2022 | 01:48 PM
image

மட்டக்களப்பு நகரில் ஆண் ஒருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

முனைத்தீவு பெரிய போரதீவு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த 11ஆம் திகதி மட்டுநகர் லொயிஸ் வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் வீதி ஓரத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 12 ஆம் திகதி குறித்த சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டிய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான விசாரணையில் சிசிடீவி கெமரா ஒன்றினை சோதனையிட்டபோது அதில் உயிரிழந்தவரை இருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து இரு தடவைகள் பொல்லால் தாக்கும் காட்சிகள்; பதிவாகியுள்ளதையடுத்து குறித்த இருவரையும் பொலிஸார்  அடையாளம் கண்டனர்.

இதில் நகர்பகுதியைச் சேர்ந்த 22,21 வயதான இளைஞர்கள் இருவரையும் சந்தேகத்தில் நேற்று சனிக்கிழமை கைது செய்ததுடன் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர். 

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் மதுபோதைக்கு அடிமையாகிய நிலையில், மனைவியிடமிருந்து பிரிந்து அவரது தாயாருடன் வாழ்ந்து வந்ததுடன் வவுணதீவு பிரதேசத்தில் நகைகடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும் சம்பவதினம் குறித்த வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்துக்கு அருகில் ஆடைகள் இன்றி வீதியில் இருந்துள்ள நிலையில் அந்த வீதியால் மோட்டர்சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் அந்தவீதியால் பெண்கள் பயணிப்பதால் குறித்த நபரை தும்புத்தடி பொல்லால் தாக்கிவிட்டு சென்று பின்னர் மீண்டும் அந்த வீதியால் திரும்பிவரும் போது அவர் அவ்வாறே ஆடையின்றி இருந்துள்ளதை கண்டு மீண்டும் தாக்கிவிட்டு சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சடலமாக மீட்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகவும்  பொலிசார் தெரிவித்த நிலையில்,

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17