ருஷ்டியின் உடல் நிலையில் முன்னேற்றம்!

By Rajeeban

14 Aug, 2022 | 12:59 PM
image

அமெரிக்காவில் நேற்று கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் செயற்கைச் சுவாசக் கருவியுடன் சிகிச்சை பெற்று வந்த பிரபல எழுத்தாளர் 75வயதான சல்மான் ருஷ்டி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சல்மான் ருஷ்டிக்கு வழங்கப்பட்ட செயற்கைச் சுவாசம் அகற்றப்பட்டுள்ளது. அவர் இயல்பாகச் சுவாசிக்கிறார். அவரால் ஓரளவுக்குப் பேச முடிகிறது எனவும் சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஒரு கண் பார்வையை ருஷ்டி இழக்க நேரிடலாம் எனவும் நேற்று தகவல்கள் வெளியாகின.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார். இதில் அவரது கழுத்து, முகம், வயிறு ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், ஹெலிகப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய 24 வயதான ஹடி மடர் என்ற இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சல்மான் ருஷ்டி தனது புத்தகங்களால் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்திய துணைக் கண்டத்தை மையமாகக் கொண்ட கிழக்கு மற்றும் மேற்கத்திய நாகரிகங்களுக்கு இடையிலான இடம்பெயர்வுகள் சுற்றியுள்ள பிரச்சினைகளிலும் அவர் கவனம் செலுத்துகிறார்.

ருஷ்டி தனது மிட்நைட்ஸ் சில்ட்ரன் (Midnight's Children) என்ற நாவலுக்காக 1981-ல் புக்கர் பரிசை வென்றார்.

1988 இல் ருஷ்டி எழுதிய 'சாத்தானின் வேதங்கள்' (The Satanic Verses) என்ற நாவல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த புத்தகத்தில் உள்ளடக்கங்கள் பல இஸ்லாமிய நாடுகளை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. இது உலகளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கொமேனி இந்தப் புத்தகத்தை "இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு" என்று விமர்சித்தார்.

அந்த புத்தகத்தில் முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய சித்தரிப்பு காரணமாக சல்மான் ருஷ்டிக்கு எதிராக அயதுல்லா கொமேனி பத்வா (மார்க்கத் தீர்ப்பு) உத்தரவிட்டார்.

அத்துடன், ஈரானிய மத அமைப்பு 2012-இல் சல்மான் ருஷ்டியின் தலைக்கு சுமார் 3.3 மில்லியன் டொலர்கள் பரிசுத் தொகையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33
news-image

ஜின்ஜியாங்கில் தனது பாரிய மனித உரிமை...

2022-09-27 16:39:59
news-image

இந்தியாவில் தயாராகும் அப்பிள் கைத்தொலைபேசி

2022-09-27 15:29:19
news-image

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல...

2022-09-27 12:55:09
news-image

ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமாக்கியது கியூபா

2022-09-27 15:37:18
news-image

சின்சோ அபேயின் இறுதிச் சடங்கு ;...

2022-09-27 12:17:39
news-image

இந்து யாத்திரிகர்களுடன் சென்ற படகு விபத்து...

2022-09-27 11:18:26