அவுஸ்திரேலியாவின் கான்பெரா விமானநிலையத்திற்குள் துப்பாக்கிசூட்டு சம்பவம்

By Rajeeban

14 Aug, 2022 | 12:13 PM
image

அவுஸ்திரேலியாவின் கான்பெரா விமானநிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் காரணமாக எவரும் காயமடையவில்லை நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவரிடமிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமானநிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதை தொடர்ந்து விமானநிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டதுடன்  காவல்துறையினர் பாதுகாப்பிற்காகஅழைக்கப்பட்டனர்.

விமானங்கள் புறப்படுவது நிறுத்தப்பட்டது.

எனினும் நிலைமை பின்னர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ள காவல்துறையினர் சிசிடிவி கமராக்களை ஆராய்ந்ததில் தனி நபர் ஒருவரே இதில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளனர்.

நபர் ஒருவர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்,

விமானநிலையத்தில் காணப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிட்டு வருகின்றனர், நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கிபிடிக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

சுமார் பத்து துப்பாக்கி சத்தத்தை கேட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார் . ஏனையவர்கள் அதனை விட குறைவான சத்தத்தையே கேட்டதாக குறிப்பிட்;டுள்ளனர்.

பதற்றம் காரணமக பொதுமக்கள் வெளியே ஓட முயன்றதால் தள்ளுமுள்ளு நிலவியது என தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குவாண்டாஸ் டேர்மினல் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தை கேட்டதாகவும் பத்து சத்தங்கள் கேட்டதாகவும் குடும்பமொன்றை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களை ஓடுங்கள் ஓடுங்கள் என தெரிவித்தனர் அது மிகவும் அச்சமூட்டும் சூழ்நிலைiயாக காணப்பட்டது என பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்

தனது கணவருடன் மெல்பேர்ன் செல்வதற்காக காத்திருந்த ஹெலன் என்ற பெண் நபர் ஒருவர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

நடுத்தர வயது நபர் கைத்துப்பாக்கியால் சுட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33