இங்கிலாந்து செல்லும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம்

Published By: Digital Desk 4

14 Aug, 2022 | 11:18 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

கரிபியன் தீவுகளில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணியில் விளையாடிய 9 வீரர்கள், இங்கிலாந்து செல்லவுள்ள 18 வீரர்கள் அடங்கிய குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

ரவீன் டி சில்வா, பவன் பத்திராஜா, ரனுத சோமரட்ன, சதீஷ ராஜபக்ஷ, ஷெவன் டெனியல், அஞ்சல பண்டார, வினுஜ ரன்புல், ட்ரவீன் மெத்யூ, வனுஜ சஹான் குமார ஆகியோரே 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியில் இடம்பெற்ற வீரர்களாவர்.

  இங்கிலாந்துக்கு ஞாயிற்றுக்கிழமை (14) பயணம் செய்யும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு நாலந்த கல்லூரி வீரர் ரவீன் டி சில்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்த வருட பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய சென். தோமஸ் கல்லூரி வீரர் கெனிஸ்டன் குணரட்னம் முதல் தடவையாக இலங்கை இளையோர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக மூன்று இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி விளையாடவுள்ளது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்

ரவீன் டி சில்வா - தலைவர், வினுஸ ரன்புல் (இருவரும் நாலந்த), பவன் பத்திராஜா, ரனுத சோமரட்ன (இருவரும் திரித்துவம்), ட்ரவீன் மெத்யூ, அசித்த வன்னிநாயக்க (இருவரும் கண்டி, புனித அந்தோனியார்), லஹிரு தெவட்டகே, வனுஜ சஹான் குமார (இருவரும் புனித பேதுருவானவர்), அஞ்சல பண்டார, துவிந்து ரணதுங்க (இருவரும் மஹநாம), ஷெவன் டெனியல் (புனித சூசையப்பர்), கெனிஸ்டன் குணரட்னம் (கல்கிஸ்ஸை, சென். தோமஸ்), சதீஷ ராஜபக்ஷ (றோயல்), அபிஷேக் லியனஆராச்சி (டி.எஸ். சேனாநாயக்க), மல்ஷ தருபதி (றிச்மண்ட்), சஹான் மிஹிர (பாணந்துறை சென். ஜோன்ஸ்), துலாஜ் சமுதித்த (வீரக்கெட்டிய, ராஜபக்ஷ ம.க.), ஹசித்த அமரசிங்க (மாத்தறை புனித சர்வெஷியஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35