ஜெனீவாவை எதிர்கொள்ள அரசாங்கம் விசேட பொறிமுறை : முன்னோக்கிச் செல்வதே எமது நோக்கம் - நீதி அமைச்சர் விஜயதாச

14 Aug, 2022 | 07:47 AM
image

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் விசேட பொறிமுறையையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி செப்ரெம்பர் மாதம் ஆரம்பித்து ஒக்டோபர் 7ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணகத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தெடர்பில் இலங்கை அரசாங்கம் தனது விடயங்களை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வெளிப்படுத்தவுள்ளது.

இந்நிலையில், அதுகுறித்து கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்படுகின்ற உள்நாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப்பணியகம் ஆகியவற்றைக் கிரமமாகச் முன்னெடுத்துச்செல்லல்ரூபவ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க நிறுவனத்தின் ஊடாக, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி எதிர்கால ஐக்கியத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் பற்றி விடயங்கள் குறிப்பிடப்படவுள்ளன.

இதனைவிடவும் சட்டம், ஒழுங்கு மற்றும் அரசியலமைப்பு விடயங்கள் பற்றிய விடயங்கள் தொடர்பில் எடுத்துரைக்கப்படவுள்ளது. குறிப்பாகரூபவ் அரசியலமைப்பில் பாராளுமுன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கும் வகையிலும் நிறைவேற்று அதிகாரத்தினை குறைக்கும் வகையிலும் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக குறிப்பிடப்படவுள்ளது.

இதற்காக அண்மையில் கலந்துரையாடலொன்றும் நடத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுரூபவ் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, ஆகிய கட்டமைப்புக்களின் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

அடுத்துவரும் காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டு பணியகம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் எதிர்காலத்திற்காக இந்தக் கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விசேடமாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்வதற்காக, அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து விசேட பொறிமுறையொன்று தாயரிக்கப்படவுள்ளது.

துரதிஷ்டவசமாக, ஒவ்வொரு இனங்களுக்குள் உள்ள கடும்போக்காளர்கள் இந்தவிடயங்களை முன்னகர்த்திச் செல்வதற்கு தடையாக இருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைப் பயன்படுத்தி தமது அரசியல் இலாபங்களை அடைவதற்கு விளைகின்றார்கள்.

பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை அவ்வாறானவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் பிரச்சினைகளை நீடித்து, தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே முனைகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36