ஜனாதிபதி பொது மன்னிப்பினை கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டார் ரஞ்சன்

Published By: Vishnu

13 Aug, 2022 | 07:54 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தனக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பினை கோரும் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களில் , நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநயக்க கையளித்திட்டுள்ளார்.

13 ஆம் திகதி சனிக்கிழமை அவர் ஆவணங்களில் கையெழுத்திட்டதாக, ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணிகளில் ஒருவரான  தினேஷ் விதானபத்திரன குறிப்பிட்டார்.

அதன்படி அந்த கோரிக்கை கடிதம் உள்ளிட்ட ஆவணங்கள், அடுத்து வரும் நாட்கLiல் ஜnaathiபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கபப்டும் என அவர் கூறினார்.

முன்னதாக கடந்த 2021 ஜனவரி 12 ஆம் திகதி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர டீ ஆப்றூ தலைமையிலான நீதியர்சர்களான விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட நீதியர்சர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான  நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என   வௌியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்ப்ட்டுள்ளதால், குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு  கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கும் தீர்ப்பை நீதியரசர்கள் குழாமின் தலைவரான செயற்பட்ட நீதியரசர் சிசிர டி ஆப்றூ திறந்த மன்றில் வாசித்திருந்தார். . அரசியலமைப்பின் 105 (3) ஆம் உறுப்புரைக்கு அமைய  இந்த 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்குவதாக  நீதியர்சர் சிசிர டி ஆப்று 20 பக்கங்களைக் கொண்ட குறித்த தீர்ப்பை வாசித்து அறிவித்தார்.

அதன்படி உடனடியாக கைது உத்தரவை பிறப்பிக்க உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதியரசர்கள் குழாம் உத்தர்விட்ட நிலையில்,  அதனடிப்படையிலேயே ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்துக்குள் வைத்தே சிறை அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

SC Rule No. 1/ 2018 எனும் இந்த வழக்கில்,  ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தரான நுகேகொடையைச் சேர்ந்த ரணவக்க சுனில் பெரேரா என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்ட மா அதிபரால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பிரதிவாதியாக ரஞ்சன் ராமநாயக்க மட்டும் பெயரிடப்ப்ட்டிருந்த நிலையில்,  அவர் சார்பில்  இவ்வழக்கில்  டி. விதானபத்திரணவின் ஆலோசனைக்கு அமைய,  சிரேஷ்ட சட்டத்தரனிகளான விரான் கொரயா, ஜே.சி. தம்பையா ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜரானார்.

 முறைப்பாட்டாளர்  ரணவக்க சுனில் பெரேரா சார்பில்,  சட்டத்தரனி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய   சட்டத்தரனி சந்துன் சேனாதிபதியுடன் சிரேஷ்ட சட்டத்தரனி  ரசிக திசாநாயக்க ஆஜரானார்.

இந் நிலையில் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் இவ்வழக்கில் சிரேஷ்ட அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத்துடன்  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  ஜனாட்திபதி சட்டத்தரனி சரத் ஜயமான்ன்ன பிரசன்னமானார்.

 இந் நிலையில் இவ்வழக்கின் வாதங்கள்,  2018 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி, 2019 ஜனவரி 28, 30 ஆம் திகதிகள்,  2019 ஜூலை 30 ஆம் திகதி, 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி, 2019 ஆகஸ்ட் 28 ஆம் திகதி, 2019 செப்டம்பர் 10 ஆம் திகதி,  2020 ஜூலை 6 ஆம் திகதி,  2020 ஜூலை 16 ஆம் திகதி, 2020 ஆகஸ்ட் 24 ஆம் திகதி மற்றும் 2020 ஆகஸ்ட் 25 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இதனையடுத்தே குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

 உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், வேண்டுமென்றே ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமதிக்கும்  கருத்துகளை வௌியிட்டுள்ளமை, நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வௌியேறும் போது தெரிவித்த கருத்துகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதியரசர் சிசிர டி ஆப்ரூ தமது தீர்ப்பை அறிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான  நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என   வௌியிட்ட கருத்தின் போது, நீதிபதிகள் எனும் சொற்பதம் தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிவாதி சார்பில்  வழக்கு விசாரணைகளிடையே கூறப்பட்டாலும், ஒவ்வொரு விசாரணை  நாட்களின் போதும் விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரதிவாதி,  குறித்த கருத்தினை வேண்டுமென்றே தெரிவித்துள்ளமையை உறுதி செய்யும் வகையில்  செயற்பட்டுள்ளதாக  நீதியரசர் குழாமின் தலைவர் சிசிர டி ஆப்ரூ தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.  தான் வெளியிட்ட கருத்துக்களை மீளப் பெறவோ அல்லது அது தொடர்பில் மன்னிப்பு கேட்கவோ போவதில்லை எனவும் அக்கருத்துக்களிலேயே தான் தற்போதும் உள்ளதாக, விசாரணைகளின் பின்னரான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  பிரதிவாதி ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள், வீடியோ ஆதாரங்கள் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதியரசர் சிசிர டி ஆப்றூ, அதன் அடிப்படையில் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றம் குற்றவாளியாக காண்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இதனிவிட, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில்,  குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்  ரஞ்சன் ராமநயக்கவுக்கு  5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம்

 கடந்த 2022 ஜூன் 7 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில்  குற்றத்தை ஒப்புக்கொள்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  கடந்த மார்ச் 25 ஆம் திகதி உயர் நீதிமன்றுக்கு  அறிவித்திருந்த நிலையிலேயே உயர் நீதிமன்றம்  இந்த தீர்ப்பை  அறிவித்தது.

 உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அளுவிஹார தலைமையிலான எல்.ரி.பி. தெஹிதெனிய மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு  அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்றை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிக்க  நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் குழாம்  தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தி  அப்போதைய உயர் நீதிமன்ற பதிவாளர் , ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான இந்த 2 ஆவது முறைப்பாட்டினை செய்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56